இந்தியா

கர்நாடக கிராமத்தில் அரசு சார்பில் சலூன்

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கத‌க் மாவட்டம் சிங்கத்தலூர் கிராமத்தில் உள்ள முடி வெட்டும் கடையில் பட்டியலினத்தவருக்கு முடி வெட்ட கூடாது என ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கதக் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், தங்களது துறையின் சார்பில் முடி வெட்டும் கடை திறக்க திட்டமிட்டனர். சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பாவை சந்தித்து அனுமதி கேட்டனர்.

          

அவர் கடந்த 26-ம் தேதி அனுமதி அளித்ததை தொடர்ந்து, சிங்கதத்தலூர் கிராமத்தில் முதல் முறையாக, அரசே முடிவெட்டும் கடையை நேற்று முன்தினம் திறந்தது. இதனால் பட்டியலின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT