இந்தியா

ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ கைது

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாட​கா​வின் கதக் மாவட்​டம் ஷிரஹட்டி தொகுதி பாஜக‌ எம்​எல்ஏ டாக்​டர் சந்துரு லமானி. இவர் கட்​டிட ஒப்​பந்​த​தா​ரர் விஜய் பூஜார் என்​பவரிடம் நீர்ப் பாசன திட்​டம் ஒன்​றின் அனு​ம​தியை பெற்று தரு​வதற்கு ரூ.11 லட்​சம் லஞ்​சம் கேட்​டுள்​ளார்.

இதுகுறித்து விஜய் பூஜார் லோக் ஆயுக்தா போலீ​ஸில் புகார் அளித்​தார். அவர்கள் கூறிய அறி​வுரை​யின்​படி நேற்று பிற்​பகல் 2 மணிக்கு விஜய் பூஜார், பாஜக எம்​எல்ஏ சந்​துரு லமானிக்கு சொந்​த​மான பாலாஜி மருத்​து​வ​மனையில் ரூ.5 லட்​சம் பணத்தை வழங்​கி​னார்.

          

அப்​போது லோக் ஆயுக்தா போலீ​ஸார் மருத்​து​வ​மனைக்​குள் நுழைந்​து அவர்களிடம் இருந்து பண‌த்தை கைப்​பற்​றினர். இதையடுத்து, சந்​துரு லமானி, அவரது உதவி​யாளர்​கள் மஞ்​சு​நாத் வால்​மீகி, குரு நாயக்​ ஆகிய 3 பேரை​யும்​ போலீஸார் கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT