இந்தியா

கர்நாடகாவில் சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறாருக்கு தடை: சித்தராமையா அறிவிப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் 16 வயதுக்கு உட்​பட்ட சிறார்கள் சமூக வலை​தளங்​களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது.

கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா 17-வது முறை​யாக சட்​டப்​பேர​வை​யில் நேற்று பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: 16 வயதுக்​குட்​பட்ட சிறார் அதி​கள​வில் செல்​போன் மற்​றும் சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​து​வ​தால் அவர்​களின் மனநலம், கல்​வி, எதிர்​காலம் பாதிக்​கப்​படு​வது அண்​மை​யில் மேற்​கொண்ட ஆய்​வில் தெரிய​வந்​தது.

          

சமூக வலை​தளங்​களுக்கு சிறார் அடிமை​யா​வ​தால் ஏற்​படும் பாதிப்​பு​களை தடுக்க கர்​நாடக அரசு உறு​திப்​பூண்​டுள்​ளது. அதனால் 16 வயதுக்கு குறை​வான சிறார் சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​து​வதற்கு தடை விதிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சித்​த​ராமை​யா​வின் இந்த அறி​விப்பை காங்​கிரஸார் மட்​டுமல்​லாமல் பாஜக, மஜத உள்​ளிட்ட எதிர்க்​கட்​சி​யினரும், கல்​வி​யாளர்​களும் வரவேற்​றுள்​ளனர். நாட்​டிலேயே முதல் மாநில​மாக கர்​நாடகா இந்த நல்ல முடிவை எடுத்​திருப்​ப​தாக சமூக ஆர்​வலர்​கள் பா​ராட்​டி உள்​ளனர்​.

SCROLL FOR NEXT