இந்தியா

கார்கே பங்​கேற்ற நிகழ்ச்சி மேடையில் ‘சுத்திகரிப்பு’ சடங்கு - விசா​ரணை நடத்​தப்படும் என ஜே.பி.நட்டா அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்​த​ராகண்ட் மாநிலம், ஹல்திவானியில் உள்ள ராம்லீலா மைதானத்​தில் கடந்த 8-ம் தேதி காங்​கிரஸ் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே பங்​கேற்ற பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​துக்​குப் பின்​னர் அந்த இடம் ‘சுத்​தி​கரிப்​பு’ செய்யப்பட்டதாக புகார் எழுந்​தது. ‘சுத்​தி​கரிப்​பு’ நிகழ்ச்சி தொடர்பான காணொலி சமூக வலை​தளங்​களில் வைரலானது. அதில், வேத மந்​திரங்​கள் முழங்க ஒரு பூசாரி ‘ஹவனம்’ (ஹோமம்) செய்​வது இடம்​பெற்​றுள்​ளது. பாஜக​வுடன் தொடர்​புடைய ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பே இதைச் செய்​த​தாக, உத்​த​ராகண்ட் காங்கிரஸ் தலை​வர் கணேஷ் கோடியல் குற்​றம் சாட்டி இருந்​தார்.

மல்​லி​கார்​ஜுன கார்கே பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தால் இந்​தச் சடங்கு நடத்​தப்​பட்​ட​தாகக் குறிப்​பிட்ட கணேஷ் கோடியல், சாதி​யின் பெய​ரால் பாஜக சமூகத்​தில் பிளவு​களை உரு​வாக்​கு​வ​தாகக் குற்​றம் சாட்டி இருந்​தார். இந்​நிலை​யில், மாநிலங்களவையில் மல்​லி​கார்​ஜுன கார்கே நேற்று இப்பிரச்சினைக் குறித்து பேசும்​போது, “உத்​த​ராகண்ட்டில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் நான் உரை​யாற்​றிய போது எந்த சமூகத்​தையோ அல்​லது மதத்​தையோ குறிப்​பிட்​டு பேச​வில்​லை.

அங்​குள்ள மக்​கள் எதிர்​கொள்​ளும் பிரச்​சினை​கள் குறித்​து​தான் பேசினேன். ஆனால், எனது உரைக்​குப் பிறகு அந்த மேடையை பாஜக தொண்​டர்​கள் ‘ஹவனம்’ நடத்தி சுத்​தி​கரிப்பு செய்துள்ளனர். ஜனநாயகத்​தில் இது​தான் நடை​முறை​யா? நான் எதிர்க்​கட்​சித் தலை​வர். இது​போன்ற விவ​காரங்​களை அரசி​ய​லாக்க ஒரு​போதும் விரும்​ப​வில்​லை. தீண்​டா​மை​யை​விட பெரிய பாவம் உலகில் எது​வும் இல்​லை. இது தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்ய வேண்​டும். இதைச் செய்​தவர்​களை கைது செய்ய வேண்டும்” என்​றார்.

இதுகுறித்து மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்​டா பேசும்போது, “நாங்கள்​தான் (பாஜக) இதைச் செய்​தோம் என்று தொடர்ந்து கூற வேண்​டாம். அங்கு நடந்​தது குறித்து நிச்​சய​மாக விசா​ரணை நடத்தப்​படும். பாஜக தேசி​யத் தலை​வர் இதை கவனிப்​பார். உங்கள் உணர்​வு​கள் புண்​பட்​டது எங்​கள் அனை​வருக்​கும் மிகுந்த வருத்தமளிக்​கிறது” என்​றார்.

அப்​போது பேசிய மாநிலங்​கள​வைத் தலை​வர் சி.பி.​ராதாகிருஷ்ணன் கூறும்​போது, “தீண்​டாமை என்​பது ஒரு பாவம். கட்சி அல்​லது கொள்கை வேறு​பாடின்றி நாம் அனை​வரும் இதைக் கண்​டிக்​கிறோம். நாம் அனை​வரும் தூய்மையானவர்களே. நம்மை சுத்​திரிக்க வேண்​டிய அவசியமில்லை. இந்த விவகாரம் குறித்து விசா​ரணை நடத்துமாறு அரசை கேட்​டுக் கொள்​கிறேன்” என்​றார்.

SCROLL FOR NEXT