இந்தியா

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை​யின் தலைமை நிர்வாக அதிகாரி​ ஜிதேந்திர மிஸ்ரா - பின்புலம் என்ன?

செய்திப்பிரிவு

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை​யின் முதல் தலைமை நிர்வாக அதி​காரி​யாக விமா​னப்​படை முன்​னாள் அதிகாரி ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.

அயோத்தி ராமர் கோயி​லில் பக்​தர்​கள் அளித்த நன்​கொடை மற்றும் காணிக்​கைகள் திருடப்​பட்ட விவ​காரம் பெரும் சர்ச்சையை ஏற்​படுத்​தி​யது. இது தொடர்​பாக உத்​தரபிரதேச மாநில அரசு சிறப்பு புல​னாய்வு குழுவை அமைத்து விசா​ரணை நடத்​தி​யது. இதில் முறை​கேடு​கள் நடந்​தது உறுதி செய்​யப்​பட்​டு, அதுதொடர்பாக 8 பேர் கைது செய்​யப்​பட்​டனர். நீதி​மன்​றத்​தில் வழக்கு விசாரணை நிலு​வை​யில் உள்​ளது.

இதனிடையே, மீண்​டும் இது​போன்ற முறை​கேடு​கள் நடக்​காமல் இருக்க, ஸ்ரீராம ஜென்​மபூமி தீர்த்​தச் சேத்​திர அறக்​கட்​டளைக்கு முழுநேர தலைமை செயல் அதி​காரியை நியமிக்க அறக்​கட்​டளை நிர்​வாகம் முடிவு செய்​தது. தலைமை செயல் அதி​காரி பதவிக்கு 5,300-க்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்த நிலை​யில் அவர்​களில் 18 பேர் தகு​தி​யானவர்​களாக அடை​யாளம் காணப்​பட்​டனர். அவர்களிடம் முன்​னாள் நீதிபதி பிரமோத் கோலி, ஓய்​வு​பெற்ற லெப்​டினன்ட் ஜெனரல் விஷ்ணு​காந்த் சதுர்​வே​தி, அணு விஞ்ஞானியான சுரேஷ் ஹவாரே ஆகியோர் நேர்​காணல் நடத்தினர்.

இந்​நிலை​யில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதி​காரி​யாக இந்திய விமானப்​படை​யில் ஏர் மார்​ஷலாக பணி​யாற்றி ஓய்வு பெற்ற ஜிதேந்​திர மிஸ்ரா தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளார். மிஸ்​ரா, அறக்​கட்​டளை​யின் தலைமை செயல் அதி​காரி​யாக அன்​றாட நிர்​வாகம், பக்​தர்​களுக்​கான வசதி​கள், நிதி ஏற்​பாடு​கள், பணி​யாளர் ஒருங்​கிணைப்​பு, பாது​காப்பு தொடர்​பான ஒருங்​கிணைப்பு மற்றும் பெரிய மத நிகழ்​வு​களின் மேலாண்மை ஆகிய​வற்றை மேற்​பார்​வை​யிடு​வார் என கூறப்​பட்​டுள்​ளது.

யார் இந்த மிஸ்​ரா?

மிஸ்ரா உத்தர பிரதேசத்​தைப் பூர்​வீக​மாகக் கொண்​ட​வர். கடந்த 1986-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் இந்​திய விமானப்​படை​யின் போர் விமானப் பிரி​வில் அதி​காரி​யாக நியமிக்​கப்​பட்​டார். அதை தொடர்ந்து பல்​வேறு பொறுப்​பு​களை வகித்த அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விமானப்​படை​யின் மேற்கு கட்​டளை பிரிவின் தலைமை தளப​தி​யாக பொறுப்​பேற்​றார். பின்​னர், கடந்த ஏப்​ரல் மாதம் ஓய்வு பெற்​றார்.

முன்​ன​தாக பாகிஸ்​தானுக்கு எதி​ரான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் இவர் முக்​கிய பங்கு வகித்​ததும், அவரது சிறப்பான சேவையைப் பாராட்​டி, குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு அவருக்கு ‘சர்​வோத்​தம் யுத் சேவா’ பதக்​கத்​தை வழங்​கி கவுர​வித்​தது​ம் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT