இந்தியா

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தொடர்கிறது: அரசுடன் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி

செய்திப்பிரிவு

ராஞ்சி / புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேலை​வாய்ப்பு, தேர்வு விதிமுறைகளுக்கு எதி​ராக மாணவர்​கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்​துள்​ளது.

இப் பிரச்​சினைக்​குத் தீர்வு காண மாநில அரசுக்​கும், மாணவர் பிரதி​நி​தி​களுக்​கும் இடையே நடை​பெற்ற 6-ம் சுற்​றுப் பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிவடைந்​தது. இதனிடையே, மாணவர்களின் போராட்​டத்​துக்கு அகில இந்​திய காங்​கிரஸ் கமிட்டித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தனது முழு ஆதர​வைத் தெரி​வித்​துள்​ளார்.

ஜார்க்​கண்ட் மாநில அரசுத் துறை தேர்​வு​களில் வெளிப்​படைத்​தன்​மையை உறுதி செய்ய வேண்​டும், தேர்வு முறை​கேடு​களைத் தடுக்க வேண்​டும் மற்​றும் உள்​ளூர்​வாசிகளுக்கு முன்​னுரிமை அளிக்​கும் வகை​யில் வேலை​வாய்ப்​புக் கொள்​கை​களில் திருத்​தம் கொண்டு வர வேண்​டும், வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மாணவர்​கள் தொடர் போராட்டங்களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இப்​பிரச்​சினை குறித்து விவா​திக்க மாநில அரசின் உயர் மட்​டக் குழு​வினர் மற்​றும் மாணவர் அமைப்​பு​களின் பிர​தி​நி​தி​கள் இடையே ராஞ்​சி​யில் 6-வது சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. ஒரு​மித்த கருத்து எட்​டப்​ப​டாத​தால், இந்த சந்​திப்​பும் எவ்​வித தீர்வும் இன்றி தோல்​வி​யில் நிறைவடைந்​தது.

காங்​கிரஸ் ஆதரவு

அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே வெளியிட்​டுள்ள அறிக்​கை​யில்,‘‘இளைஞர்​களின் எதிர்​காலத்​தைப் பாதிக்​கும் வகையி​லான கொள்​கைகளை மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்​டும். மாணவர்​களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்​டும். மாணவர்​களின் இந்த அறப்போராட்டத்துக்கு காங்​கிரஸ் கட்சி எப்​போதும் துணை​யாக இருக்​கும்,’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

போராட்​டத்​தின் பின்​னணி

கடந்த சில மாதங்​களாகவே ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (ஜேபிஎஸ்​சி) மற்​றும் ஊழியர் தேர்வு வாரி​யம் (ஜேஎஸ்​எஸ்​சி) மூலம் நடத்​தப்​படும் தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடப்​ப​தாகக் கூறி மாணவர்​கள் போராடி வரு​கின்​றனர். அரசு தரப்​பில் ஏற்​கெனவே ஐந்து முறை பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்ட போ​தி​லும், மாணவர்​களின் முக்​கியக் கோரிக்கைகள் ஏற்​கப்​பட​வில்​லை.

இதனால் மாநிலம்​ தழு​விய அளவில்​ போ​ராட்​டங்​கள்​ தீவிரமடைந்து வருகின்​றன. மாணவர்கள் அமைப்பினருடன் ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்யா குமார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, தேர்வுகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் ஒரு குழுவை அமைக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் சுதிவ்யா தெரிவித்தார்.ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு சிஐடி சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரின் ராஜினாமாவையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT