இந்தியா

போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்ப தாடியை மழித்த ஜெய்ஷ் தீவிரவாதி

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ​காஷ்மீர் போலீ​ஸின் கண்​காணிப்​பில் இருந்து தப்​பிக்க ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாதி சைஃபுல்லா தாடியை மழித்​து, மொட்​டையடித்து தலைமறை​வாக சுற்​றித் திரி​கிறார்.

பாகிஸ்​தானை சேர்ந்த சைஃபுல்​லா, ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பில் இணைந்து இந்​தி​யா​வுக்கு எதி​ரான நாச வேலைகளில் ஈடு​பட்டு வரு​கிறார். கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு பாகிஸ்​தானில் இருந்து காஷ்மீருக்​குள் அவர் ஊடுரு​வி​னார். ஜம்மு பகு​தி​யில் நிகழ்த்​தப்​பட்ட பல்​வேறு தீவிர​வாத தாக்​குதல்​களில் அவருக்கு தொடர்பு இருக்​கிறது.

          

கடந்த 4-ம் தேதி காஷ்மீரின் கிஷ்து​வார் பகு​தி​யில் பதுங்​கி​யிருந்த சைஃபுல்​லா​வை​யும் அவரது கூட்​டாளி​களை​யும் பாது​காப்​புப் படை வீரர்​கள் சுற்றி வளைத்​தனர். அப்​போது இருதரப்​புக்​கும் இடையே கடும் துப்​பாக்கி சண்டை நடை​பெற்​றது. இதில் ஒரு பாகிஸ்​தான் தீவிர​வாதி சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். ஆனால் சைஃபுல்லா அங்​கிருந்து தப்​பியோடி விட்​டார். காஷ்மீர் போலீஸ், பாது​காப்பு படைகளின் கண்​காணிப்​பில் இருந்து தப்​பிக்க அவர் தாடியை மழித்​து, மொட்​டையடித்து தலைமறை​வாக சுற்றி வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இதைத் தொடர்ந்து காஷ்மீர் போலீஸ் தரப்​பில் சைஃபுல்​லா​வின் புகைப்​படங்​கள் கிஷ்து​வார், தோடா பகு​தி​களில் ஒட்​டப்​பட்டு உள்​ளன. பொது​மக்​கள் எளி​தில் அடை​யாளம் கண்​டு​பிடிக்க, அவர் தாடியோடு இருக்​கும் புகைப்​படம், தாடி​யில்​லாத புகைப்​படம் முக்​கிய பகு​தி​களில் ஒட்​டப்​பட்​டுள்ளது.

இதுதொடர்​பாக போலீஸ் மூத்த அதி​காரி சந்​தீப் மேத்தா கூறும்​போது, “ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாதி சைஃபுல்​லாவை தீ​விர​மாக தேடி வரு​கிறோம். அவர் தப்​பிச் செல்​வதை தடுக்க பொது இடங்​களில் அவரின் புகைப்​படங்​கள் ஒட்​டப்​பட்டு உள்​ளன. பெண்​களின் ஆடை மற்​றும் பர்கா அணிந்து தப்​பிச் செல்ல அவர் திட்​ட​மிட்டு இருப்​ப​தாக​வும் தகவல்​கள் கிடைத்​துள்​ளன. அவர் விரை​வில்​ பிடிபடு​வார்​” என்​று தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT