ஜஹாங்கீர் கான்

 
இந்தியா

ஃபால்டாவின் ‘புஷ்பா’ ஜஹாங்கீர் கான்: மேற்கு வங்க அதிரடிப்படையால் கைது

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​க சட்​டப்​பேரவை தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் ஃபால்டா தொகு​தி​யில் போட்​டி​யிட்​ட​வர் ஜஹாங்​கீர் கான். திரிண​மூல் தலை​வர் மம்தா பானர்​ஜி​யின் மருமக​ன் அபிஷேக் பானர்​ஜி​யின் நெருங்​கிய உதவி​யாளர் ஆவார்.

இந்​நிலை​யில், ஃபால்​டா​வில் வாக்​காளர்​களை ஜஹாங்​கீர் கான் அச்​சுறுத்​தி​ய​தாக புகார் எழுந்த நிலை​யில் அங்கு தேர்​தல் பார்வை​யாள​ராக இருந்த உ.பி. ஐபிஎஸ் அதி​காரி அஜய் பால் சர்மா அவருக்கு எச்​சரிக்கை விடுத்​தார். இதற்கு ஜஹாங்கீர் கான், "அவர் சிங்​கம் என்​றால் நான் புஷ்​பா" என்று கூறி தன்னை ‘புஷ்​பா​'வாக (திரைப்படம்) அடை​யாளப்​படுத்​திக் கொண்​டார்.

தேர்​தல் முறை​கேடு புகார் தொடர்​பாக ஃபால்​டா​வில் மறுவாக்குப் பதிவு அறிவிக்​கப்​பட்​டது. வாக்​குப் பதிவுக்கு 48 மணி நேரத்​துக்கு முன் ஜஹாங்​கீர் கான் திடீரென போட்​டியி​லிருந்து வில​கு​வ​தாக அறி​வித்​தார். இத்​தொகு​தி​யில் பாஜக 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

தேர்​தலுக்​குப் பிறகு ஜஹாங்​கீர் கான் மீது வாக்​காளர்​களை மிரட்டு​தல், நில அபகரிப்​பு உள்​ளிட்ட பல வழக்​கு​கள் பதிவு செய்யப்​பட்​டன. கொல்​கத்தா உயர் நீதி​மன்​றம் அவருக்கு வழங்கியிருந்த இடைக்​கால பாது​காப்பை ரத்து செய்​தது. இதையடுத்து, அவரை இந்​திய – நேபாள எல்​லை​யில் மேற்கு வங்க சிறப்​பு அதிரடிப்​ படை போலீ​ஸார்​ நேற்​று கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT