இந்தியா

கால்நடை காப்பகம் ஏற்படுத்துவது மாவட்ட நிர்வாகத்தின் பணி: மத்திய அரசு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அடைப் பதற்காக காப்பகங்களை ஏற்படுத்துவது மாவட்ட நிர்வாகத்தின் பணி என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தெருநாய்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அடைப்பதற்காக காப்பகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உடன்பாடு இல்லை என்பதால், அது தொடர்பாக விளக்கம் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் திரியும் விலங்குகளை அகற்றுவது, அவற்றுக்கு காப்பகம் ஏற்படுத்துவது மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளையே சாரும். அவை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணி வரம்புக்கு அப்பாற்பட்டவை’’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, ‘‘இந்த வழக்கு உரிய சிறப்பு அமர்வு முன்பு விரைவில் பட்டியலிடப்படும்’’ என உறுதி அளித்தார்.

SCROLL FOR NEXT