பஞ்சாப் போலீஸ் டிஐஜி சந்தீப் கோயல்

 
இந்தியா

பஞ்சாபில் 2 போலீஸார் கொலையில் ஐஎஸ்ஐ தொடர்பு

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள அதியன் கிராமத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குர்னாம் சிங், ஊர்க்காவல் படை வீரர் அசோக் குமார் ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக போலீஸ் டிஐஜி சந்தீப் கோயல் நேற்று கூறுகையில், "இந்த சம்பவத்தில் திலவார் சிங் (19), ரஞ்சித் சிங் (19) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரஞ்சித் சிங் தப்பிக்க முயன்றபோது நடந்த என்-கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

3-வது குற்றவாளி இந்தர்ஜித் சிங்கை (21) தேடி வருகிறோம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. வெறும் ரூ.20 ஆயிரத்துக்காக இந்தப் படுகொலை நடந்துள்ளது" என்றார்.

          
SCROLL FOR NEXT