புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் மங்களா பீமாராவ் இங்ளே என்ற பெண் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததால், ஊராட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்ற மாநில சட்டத்தின் அடிப்படையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 2003-ம் ஆண்டில் சராசரியாக 3 குழந்தைகள் என்றிருந்த நிலை, தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ள நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கட்டுப்பாடு இனி தேவையா என்று கேள்வி எழுப்பினர்.