இந்தியா

இந்தியர்கள் அளித்த நன்கொடையால் 40 டன் மருந்துகளை வாங்கிய ஈரான் தூதரகம்

சொந்த நாட்டுக்கு கொண்டு செல்வதில் சிக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யர்​கள் அளித்த நன்​கொடை​யால் 40 டன் மருந்​துகளை ஈரான் தூதரகம் கொள்​முதல் செய்​திருக்​கிறது. ஆனால் அவற்றை கொண்டு செல்​வ​தில் தொடர்ந்து சிக்​கல் நீடிக்​கிறது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஈரானில் இது​வரை 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் 27,000 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். போர் தீவிரமடை​யும் சூழலில் ஈரானில் மருந்​துகள், மருத்​துவ உபகரணங்​களின் தேவை கணிசமாக அதி​கரித்து வரு​கிறது.

          

மனி​தாபி​மான அடிப்​படை​யில் இந்​தி​யா​வில் இருந்து ஈரானுக்கு மருந்​துப் பொருட்​கள் விமானம் மூலம் அனுப்பி வைக்​கப்​பட்டு வந்​தது. ஈரானின் மஹன் ஏர் என்ற சரக்கு விமானம் இந்​தி​யா​வில் இருந்து ஈரானுக்கு மருந்​துகளை கொண்டு சென்​றது. சில நாட்​களுக்கு முன்பு ஈரானின் மஷாத் விமான நிலை​யத்​தில் இருந்து மஹன் ஏர் விமானம் இந்​தி​யா​வுக்​குப் புறப்​படத் தயா​ராக இருந்​தது.

அப்​போது அமெரிக்​கா​வின் வான்​வழி தாக்​குதலில் அந்த விமானம் மிகக் கடுமை​யாக சேதமடைந்​தது. இதனால் இந்​தி​யா​வில் இருந்து அர்​மீனியா வழி​யாக ஈரானுக்கு மருந்​துகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்​தி​யர்​கள் நன்​கொடை: போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ள ஈரான் மக்​களுக்கு உதவு வதற்​காக இந்​தி​யர்​கள் சார்​பில் தாராள​மாக நன்​கொடை வழங்​கப்​பட்டு உள்​ளன. இந்த நன்​கொடைகள் மூலம் இந்​தி​யா​வில் மருந்​துகளை வாங்க மத்​திய அரசிடம் ஈரான் தூதரகம் அனு​மதி கோரியது. மனி​தாபி​மான அடிப்​படை​யில் மத்​திய அரசு உடனடி​யாக அதற்கு அனு​மதி வழங்​கியது. இதன்​படி ஈரான் தூதரகம் சார்​பில் சுமார் 40 டன் மருந்​துகள் கொள்​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன. ஆனால் இந்த மருந்​துகளை ஈரானுக்கு கொண்டு செல்​வ​தில் தொடர்ந்து சிக்​கல் நீடிக்​கிறது.

இதுகுறித்து இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதரக அதி​காரி ஒரு​வர் கூறும்போது, "தற்​போது இந்​தி​யா​வில் இருந்து 40 டன் மருந்​துகளை கொள்​முதல் செய்​திருக்​கிறோம். இது ஈரானுக்கு மிக​வும் அவசிய தேவை​யாக இருக்​கிறது. ஆனால் அமெரிக்​கா​வின் தொடர் தாக்​குதல்​களால் எங்​களால் ஈரானுக்கு மருந்​துகளை அனுப்பி வைக்க முடிய​வில்​லை" என்றார்.

SCROLL FOR NEXT