புதுடெல்லி: இலங்கை அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேற்று ‘எக்ஸ்' தளத்தில் கூறியிருப்பதாவது: உலகம் ஒரு நிலையற்ற கட்டத்தில் நுழைந்துள்ளது. புயல் நிறைந்த கடல்கள் நம் முன்னால் உள்ளன. இந்தியாவின் எண்ணெய் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நமது இறக்குமதியில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்கின்றன.
எல்பிஜி மற்றும் எல்என்ஜிக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், போர் நமது கொல்லைப்புறத்தை எட்டியுள்ளது. ஆனால் பிரதமர் எதுவும் சொல்லவில்லை. நமக்கு ஸ்திரமான தலைமை தேவை. அதற்கு பதிலாக, இந்தியா நமது சுயாட்சியை விட்டுக்கொடுத்த பிரதமரைக் கொண்டுள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.