இந்தியா

மாயமான இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி: நேபாளத்துக்கான இந்திய தூதர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நே​பாளத்​தில் மாய​மான இந்​தி​யர்​களை கண்டுபிடிக்க​வும் அவர்​களை பத்​திர​மாக மீட்டு வரவும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தீவிர முயற்​சிகளை மேற்கொண்​டு​ வரு​வ​தாக நேபாளத்​துக்​கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா தெரி​வித்​தார்.

நேபாளத்​தில் திபெத் எல்​லை​யையொட்டி உள்ள பல மாவட்டங்களை கடந்த புதன்​கிழமை பெரு​வெள்​ளம் தாக்​கியது. இதில், இந்​தி​யர்​கள் உள்பட ஏராள​மான வெளி​நாட்​டினர் மாயமாகினர். 300-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் மாய​மான​தாக முதற்​கட்ட தகவல்​கள் வெளி​யான நிலை​யில், 288 பேர் மாயமானதாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் நேற்று முன் தினம் அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது.

மேலும், வெள்​ளம் பாதித்த பகு​தி​யில் சிக்கி தவித்த 21 இந்​தியர்கள் மீட்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​தது. தமிழ்​நாட்டை சேர்ந்த அந்த 21 பேரும் நேற்று டெல்லி வந்​தடைந்​தனர். இதனிடையே, திரிசூலி 1 மின் திட்​டத்​தில் பணி​யாற்றி வந்​த​போது வெள்​ளத்​தில் சிக்​கிய 63 இந்​தி​யர்​கள் மீட்​கப்​பட்​டனர். இதன் மூலம் மீட்​கப்​பட்ட இந்​தி​யர்​களின் எண்​ணிக்கை 84 ஆக உயர்ந்தது.

இந்​நிலை​யில், நேபாளத்​தில் மாய​மான இந்​தி​யர்​களை கண்​டு​பிடிக்​க​வும் அவர்​களை பத்​திர​மாக மீட்டு வரவும் நேபாளத்​தில் உள்ள இந்​திய தூதரகம் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வருவதாக நேபாளத்​துக்​கான இந்​திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்​தவா தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அவர் அளித்த பேட்​டி​யில்​,”​காணா​மல் போன சுற்​றுலாப் பயணி​களைக் கண்டறிய இந்​திய தூதரகம் நேபாள ராணுவம் மற்​றும் பல்​வேறு அமைப்​பு​களு​டன் இணைந்து தீவிர​மாக செயல்​பட்டு வரு​கிறது. நேபாள ராணுவத்​துடன் தொடர்ந்து தொடர்​பில் இருக்​கிறோம். காணா​மல் போன இந்​தி​யர்​களைப் பற்றி எங்​களிடம் உள்ள தகவல்​களை அவர்​களு​டன் பகிர்ந்​து வரு​கிறோம்​” என தெரிவித்தார்​.

SCROLL FOR NEXT