இந்தியா

ஐஎன்எஸ்வி கப்பல் டிச.29-ல் ஓமனுக்கு பயணம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடற்படையின் முன்னோடி தையல் பாய்மரக் கப்பலான ஐஎன்எஸ்வி கவுண்டின்யா, டிசம்பர் 29-ம் தேதி ஓமனுக்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: ஐஎன்எஸ்வி கவுண்டின்யா, அஜந்தா குகை ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள 5 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கப்பலை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட பாய்மரக் கப்பல் ஆகும்.

இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள கவுண்டின்யா கப்பல் குஜராத்தில் உள்ள போர்பந்தரில் இருந்து ஓமனில் உள்ள மஸ்கட்டுக்கு டிசம்பர் 29-ம் தேதி பயணிக்க உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை பரந்த இந்தியப் பெருங்கடல் உலகத்துடன் இணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்வழிப்பாதைகளை இந்த கப்பல் அடையாளப்பூர்வமாகப் பின்தொடரும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT