இந்தியா

இந்து கடவுள்களை அவமதிப்பதா? - பிரகாஷ்ராஜ் மீது ரூ.100 கோடிக்கு மான நஷ்டஈடு வழக்கு

திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர் தொடர்ந்தார்

என்.மகேஷ்குமார்

திருப்பதி: இந்து கடவுள்​களை அவமானப்​படுத்​தி யார் பேசினாலும் அவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​போம் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு உறுப்​பினர் பானு பிர​காஷ் ரெட்டி எச்​சரித்​துள்​ளார். இவர் நடிகர் பிர​காஷ்​ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்துள்ளார்.

அறங்​காவலர் குழு உறுப்​பினரும், பாஜகவின் ஆந்​திர மாநில செய்தித் தொடர்​பாள​ரு​மான பானு பிர​காஷ் ரெட்​டி, சமீபத்​தில் ராமர், லட்​சுமணர் பற்றி கேலி​யாக பேசிய நடிகர் பிர​காஷ்ராஜ் மீது ரூ. 100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்​துள்ளார். இது தொடர்​பாக அவர் நடிகர் பிர​காஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்​டுமென ஆந்​திர டிஜிபி​யிடம் புகார் அளித்​துள்​ளார்.

இது தொடர்​பாக பானு பிர​காஷ் ரெட்டி கூறிய​தாவது: இந்து கடவுள்​கள், இந்து கலாச்​சா​ரங்​களை கொச்சை படுத்​தும் வகையில் சமூக வலை​தளத்​தில் பேசுவது பலருக்கு வாடிக்கையாகி விட்​டது. அப்​படி பேசுபவர்​களின் பேச்சை இனி கேட்​டுக்​கொண்டு இருக்க முடி​யாது. சமீபத்​தில் இந்து கடவுள்களை இழி​வாக​வும், கேலி​யும், கிண்​டலு​மாக பேசிய நடிகர் பிர​காஷ்ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

சிலர் இதையே பிழைப்​பாக வைத்​துக்​கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் பேசுகின்​றனர். சனாதன தர்​மத்தை யார் தரக்​குறை​வாக பேசி​னாலும் நாங்​கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்​டோம். கோயில்​கள் என்​பது மதசார்​பற்ற இடம் கிடை​யாது. அது இந்​துக்​களுக்கு மட்​டு​மானது. இனி கோயில்​களில் இந்​துக்​கள் மட்​டுமே பணி​யாற்ற வேண்​டும். வியாபாரங்​களும் இந்​துக்​கள் மட்​டுமே செய்ய வேண்​டும்.

ஸ்ரீசைலம் மல்​லி​கார்​ஜுனர் கோயி​லிலும் வேற்று மதத்​தினர் பலர் பணி​யாற்​றுகின்​றனர் எனும் தகவல்​கள் வரு​கின்​றன. இது குறித்தும் ஆந்​தி​ரா​வில் கூட்​டணி அரசு ஆலோ​சித்து முடிவெடுக்கும். ஆந்​தி​ரா​வில் இந்து கோயில்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​னால் சட்​டப்​படி கடும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது. மத்​தி​யில் உள்ள பாஜக​வின் ஆட்​சி​யால் நாட்​டில் இந்து கோயில்​கள், கலாச்​சா​ரத்​திற்கு பாது​காப்​பு உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT