இந்தியா

ரூ.410 கோடி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டவர் கைது

செய்திப்பிரிவு

பெங்களூரு: போலி நிறுவனங்கள் மூலம் ஜிஎஸ்டி மோசடி நடைபெறுவதாக கர்நாடக வணிக வரித் துறையின் அமலாக்கப் பிரிவுக்கு புகார் வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முகமது தவுக்கீர், போலி ஷெல் நிறுவனங்கள் வாயிலாக உள்ளீட்டு வரி வரவு மூலம் கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள், இந்த மோசடி யில் ஈடுபட்ட முக்கிய நபரான முகமது தவுக்கீரை (42) கைது செய்தனர். ஆந்திராவை சேர்ந்த இவர் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போலியான ஆவணங்கள், தவறான முகவரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி (GST) பதிவுகளைப் பெற்று மோசடி செய்துள்ளார்.

முகமது தவுக்கீரிடம் நடத்திய விசாரணையில், ரூ.410 கோடி அளவுக்கு மோசடிப் பரிவர்த்தனைகள் செய்தது தெரியவந்தது. இந்த மோசடியில் அவரது கூட்டாளி முகமது பாஷா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT