இந்தியா

இந்தியாவின் போராட்டங்கள் உள்நாட்டு விவகாரம்: அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் நடை​பெறும் போராட்​டங்​கள் அதன் உள்​நாட்டு விவகாரம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்க வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ இந்தியா வந்​துள்​ளார். இந்​நிலை​யில், இந்​தி​யாவில் அரசுக்கு எதிராக நடை​பெறும் போராட்​டம் குறித்தும் அதுகுறித்த விமர்சனங்கள் குறித்தும் அவரிடம் செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பினர். அப்​போது அவர் கூறும்​போது, “இங்கு நடைபெறும் போராட்​டங்​கள் உள்​நாட்டு அரசி​யல் விவகாரம். நான் இதைப் பற்றி எது​வும் தெரி​விக்​கப் போவதில்லை.

இது​வொரு ஜனநாயகம், இங்கு தேர்​தல்​கள் நடக்​கின்​றன. உள்​நாட்டு அரசி​யல் விவகாரங்​களில் நான் கருத்து சொல்ல விரும்​பவில்லை. அமெரிக்​கா​விலும் நாங்​கள் ஒவ்​வொரு நாளும் போராட்​டங்​களை எதிர்​கொள்​கிறோம். எனவே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT