இந்தியா

இணையம் பயன்படுத்தும் இந்தியப் பெண்கள் விகிதம் 64% ஆக உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய குடும்ப சுகா​தார ஆய்வு அறிக்கையில் ( என்எப்​எச்​எஸ்​-6 ) கூறியிருப்பதாவது: 2019- 2021 கால​கட்டத்துக்கான என்​எப்​எச்​எஸ்- 5 அறிக்​கை​யானது 33.3 % இந்​தி​யப் பெண்கள் இணை​யத்தை குறைந்​தது ஒரு முறை​யா​வது பயன்படுத்தியுள்ளதாக பதிவு செய்​திருந்​தது.

இது 2023- 24ல் இரு மடங்​காக (64.3 %) அதி​கரித்​துள்​ளது. இது பெண்களிடையே டிஜிட்​டல் பயன்​பாட்​டுக்​கான அணுகலில் குறிப்பிடத்தக்க மாற்​றத்தை காட்​டு​கிறது. வங்கிக் கணக்​கு​கள் கொண்ட பெண்​களின் விகிதம் 2019- 2021 கால​கட்​டத்​தில் 78.6 % ஆக இருந்தது. இது, 2023- 24 கால​கட்​டத்​தில் 89 % ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT