இந்தியா

விவேகானந்தர் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர் புகழாரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுவாமி விவேகானந்தரின் 163-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி 'எக்ஸ்' தளத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட பதிவில், “காலத்தால் அழியாத தொலை நோக்குப் பார்வையாளராகவும் ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர், அக வலிமையும் மனிதகுலத்துக்கான சேவையும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான அடித்தளங்கள் என்று போதித்தார்.

இந்தியாவின் நித்திய ஞானத்தை அவர் உலகுக்கு எடுத்துச் சென்றார். விவேகானந்தர் இந்தியர்களிடையே தேசியப் பெருமையை ஊட்டினார். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்க இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தார் அவரது போதனைகள் மனித குலத்திற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT