இந்தியா

பாகிஸ்தானுக்கு ரகசியங்களை கசியவிட்ட விமானப் படை அதிகாரி கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாகிஸ்​தான் உளவுத் துறை​யின் சதித் திட்​டத்​தில் (ஹனி டிராப்) சிக்கி பாது​காப்பு தொடர்பான ரகசி​யங்​களை பகிர்ந்து கொண்​ட​தாக விங் கமாண்​டர் ஒரு​வர் மீது இந்​திய விமானப்​படை புகார் செய்​தது.

இதன் அடிப்​படை​யில், டெல்லி காவல் துறை​யின் உளவுப் பிரிவு மற்​றும் விமானப்​படை​யின் உளவுப் பிரிவு இணைந்து நடத்​திய நடவடிக்​கை​யில், கடந்த மே 31, 2026 அன்று இரவு அந்த அதி​காரி கைது செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில், விங் கமாண்​டரிடம் நடத்​தப்​பட்ட விசாரணை அடிப்​படை​யில் டெல்லி போலீஸார் நேற்று வெளி​யிட்ட அறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது:

விங் கமாண்​டர் மீது அதி​காரப்​பூர்வ ரகசி​யச் சட்​டத்​தின் கீழ் வழக்குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. தனிப்​பட்ட வாழ்க்​கை​யில் கடினமான கட்​டத்​தைக் கடந்​து​கொண்​டிருந்த அந்த அதி​காரி, சமூக வலை​தளம் மூல​மாக ஒரு பெண்​ணுடன் பழகத் தொடங்கியுள்ளார்.

அந்​தப் பெண் படிப்​படி​யாக அதி​காரி​யின் நம்​பிக்​கை​யைப் பெற்று, ராணுவ நடவடிக்​கை​களின் நகர்​வு​கள் குறித்த விவரங்​களைக் கேட்​டுப் பெற்​றுள்​ளார். மேலும், முக்​கிய ஆவணங்​களை​ அந்​தப் பெண்​ணுக்கு அதி​காரி அனுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT