இந்தியா

India-US Trade Deal: தேசிய அளவில் போராட்டத்துக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா அழைப்பு

வேட்டையன்

புதுடெல்லி: இந்திய - அமெரிக்க வர்த்தக கட்டமைப்பு இடைக்கால ஒப்பந்தத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை வலியுறுத்தும் விதமாக வரும் 12-ம் தேதி தேசிய அளவிலான போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.

“இந்தியா மற்றும அமெரிக்கா இடையே இடைக்​கால வர்த்தக ஒப்​பந்​தம் விரை​வில் கையெழுத்​தாக உள்​ளது. இந்த ஒப்​பந்​தத்​தால் இரு நாடு​களும் நிறை​வான பலன்​களை பெறும். குறிப்​பாக இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் அதிக பலன் அடை​வார்​கள்.

          

அமெரிக்​கா​வின் மரபணு மாற்​றப்​பட்ட வேளாண் விளைபொருட்​கள் இந்​தி​யா​வில் விற்​பனை செய்ய அனு​மதி வழங்​க​வில்​லை. அமெரிக்​கா​வின் சோளம், அரிசி, கோது​மை, ராகி, தானி​யங்​களை இந்​தி​யா​வில் விற்​பனை செய்ய எவ்​வித சலுகை​யும் வழங்​க​வில்​லை.

இந்​தி​யா​வில் வாழைப்​பழம், ஆரஞ்​சு, ஆப்​பிள், மாம்​பழம், கொய்​யா, காளான், கோகோ, கடுகு எண்​ணெய், அன்​னாசி சாகுபடி​யில் ஈடு​படும் விவ​சா​யிகளுக்கு எவ்​வித பாதிப்​பும் ஏற்​ப​டாது. நலன்​கள் முழு​மை​யாக பாது​காக்​கப்​படும். இந்​தி​யா​வில் இறைச்​சி, கோழி இறைச்​சி, பால் பொருட்​கள், சோயாபீன், சர்க்​கரை, தானி​யங்​களை உற்​பத்தி செய்​யும் விவ​சா​யிகளுக்கு சிறிய பாதிப்பு கூட ஏற்​ப​டாது” என இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை அன்று மத்​திய வர்த்​தக, தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் விளக்கினார்.

இந்த சூழலில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் சார்ந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு, அமெரிக்க விவசாயத் துறையின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. இது அவர்களிடம் முழுவதுமாக சரணடைவதாகும். உலர்த்தப்பட்ட தானியக் கழிவுகள், கால்நடைத் தீவனத்திற்கான சிவப்பு சோளம், பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் ஆகியவை கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்டு இருப்பதைக் குறிப்பிட்டனர்.

மேலும், ஆப்பிள் மற்றும் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள ஜம்மு காஷ்மீர், இமாச்சல, மகாராஷ்டிரா, குஜராத் மாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். இந்த இடைக்கால ஒப்பந்தத்தை கண்டித்து வரும் 12-ம் தேதி தேசிய அளவிலான போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்.

SCROLL FOR NEXT