இந்தியா

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை வெளியீடு: பிரதமர் மோடி வரவேற்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகச் சிறந்த செய்தி என்று பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வலுவான உறவுகளுக்கு காரணமாக இருக்கும் அதிபர் ட்ரம்ப்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.

          

இந்த ஒப்பந்தம், நமது கூட்டாண்மையின் ஆழம், நம்பிக்கை மற்றம் துடிப்பை பிரதிபலிக்கிறது. இந்திய விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு புதிய வாய்ப்புகளை திறப்பதன் மூலம், இந்த ஒப்பந்தம் இந்தியாவில் தயாரிப்போம் முயற்சிகளை வலுப்படுத்தும். இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.

இந்தியாவும் அமெரிக்காவும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஒப்பந்தம், நமக்கு இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும். மேலும், நெகிழ்ச்சியான, நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும். அதோடு, உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி இந்தியா முன்னேறும்போது, அது நமது மக்களுக்கு அதிகாரத்தை அளிக்கும். மேலும், பகிரப்பட்ட செழிப்புக்கு பங்களிக்கும் உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் ஊறுதிபூண்டுள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT