இந்தியா

India-US trade deal | திருத்தங்கள் இரு தரப்பு புரிதல்களை பிரதிபலிப்பதாக ஜெய்ஸ்வால் கருத்து

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் புரிதல்களையே, இரு தரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பிரதிபலிக்கின்றன என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ‘‘இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும் வகையிலான இந்திய - அமெரிக்க இடைக்கால வர்த்தக கட்டமைப்பு குறித்த கூட்டறிக்கை கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

கூட்டறிக்கையே இவ்விஷயத்தில் இரு நாடுகளின் பரஸ்பர புரதலுக்கான அடிப்படையாகும். அமெரிக்காவின் fact sheet-ல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள், கூட்டறிக்கையில் உள்ள பகிரப்பட்ட புரிதல்களை பிரதிபலிக்கின்றன. இந்த இடைக்கால ஒப்பந்த கட்டமைப்பை இறுதி செய்வதற்கு தற்போது இருதரப்பும் பாடுபடும்’’ என தெரிவித்தார்.

          

மாற்​றங்​கள் என்ன?: பருப்பு உற்​பத்​தி​யில் இந்​தியா உலகள​வில் பெரிய நாடாக உள்​ளது. உலகளா​விய பருப்பு உற்​பத்​தி​யில் இந்தியா 25 முதல் 28 சதவீத இடத்தை பெற்றுள்​ளது. ஆனால் அமெரிக்க பருப்​பு​கள் மீது இந்​தியா விதிக்​கும் 30 சதவீத இறக்குமதி வரியை நீக்க வற்​புறுத்த வேண்​டும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​துக்கு அமெரிக்க செனட் உறுப்​பினர்​கள் கடிதம் எழுதியிருந்தனர்.

அமெரிக்கா முதலில் வெளி​யிட்ட வர்த்தக ஒப்​பந்த விவரத்தில் பருப்​பு​கள் மற்றும் அமெரிக்க வேளாண் பொருட்​கள் பற்றி குறிப்பிட்​டிருந்​தது. ஆனால் அமெரிக்கா மாற்​றியமைத்து வெளியிட்ட வர்த்தக ஒப்​பந்​தத்​தில் பருப்பு​கள் பற்றி எது​வும் குறிப்பிடப்​பட​வில்​லை.

அமெரிக்​கா​விடம் இருந்து 5 ஆண்​டு​களில் 500 பில்​லியன் டாலர் அளவி​லான எரிசக்தி பொருட்​கள், தகவல் தொடர்பு தொழில்​நுட்ப பொருட்​கள், வேளாண் பொருட்​கள், நிலக்கரி மற்​றும் சேவைகளை பெற இந்​தியா உறுதி அளித்​துள்​ள​தாக முதலில் வெளி​யிடப்​பட்ட ஒப்​பந்​தத்​தில் அமெரிக்கா கூறி​யிருந்​தது. ஆனால் மாற்​றி அமைக்கப்பட்ட ஒப்​பந்​தத்​தில் வேளாண் பொருட்கள் நீக்கப்​பட்​டுள்​ளன. உறுதி அளித்​துள்​ளது என்ற வார்த்தைக்கு பதிலாக உத்​தேசித்​துள்​ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT