இந்தியா

4 விமானங்களில் 68 டன் நிவாரண பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​துக்கு இதுவரை 4 விமானங்​களில் 68.5 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி உள்​ளது.

கடந்த 26-ம் தேதி நேபாளத்​தில் பெருவெள்ளம் ஏற்​பட்​டது. அன்றைய தினமே இந்​திய விமானப் படை​யின் சி-130ஜே ரக சரக்கு விமானம் மூலம் நேபாளத்​துக்கு 10 டன் நிவாரண பொருட்கள் அனுப்​பப்​பட்​டன. கடந்த 27-ம் தேதி இந்​திய விமானப் படை​யின் சி-17 குளோப்​மாஸ்​டர் விமானம் மூலம் 37.5 டன் நிவாரணப் பொருட்​கள் நேபாளத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து கடந்த 28-ம் தேதி சி-130ஜே விமானம் மூலம் 10 டன் நிவாரணப் பொருட்​கள் நேபாள தலைநகர் காத்​மாண்​டுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. கடந்த 29-ம் தேதி இந்​திய விமானப் படை​யின் சரக்கு விமானம் மூலம் மேலும் 11 டன் நிவாரண பொருட்​கள் அனுப்​பப்​பட்​டன.

ஒட்​டுமொத்​த​மாக 4 விமானங்​களில் 68.5 டன் நிவாரணப் பொருட்​களை அந்த நாட்​டுக்கு இந்​தியா அனுப்பி வைத்​திருக்​கிறது. இதில் போர்​வை​கள், தார்​பாலின் கூடாரங்​கள், தூங்​கு​வதற்​கான சிறப்பு படுக்​கைகள் ஆகியவையும் அடங்கும்.

மேலும் நேபாளம் முழு​வதும் பெரு​வெள்​ளத்​தால் 40-க்​கும் மேற்​பட்ட பிர​தான பாலங்​கள் சேதமடைந்​துள்​ளன. அங்கு தற்​காலிக பாலங்​களை அமைக்க இந்​தி​யா​வின் உதவியை நேபாள அரசு கோரி உள்​ளது. முதல்​கட்​ட​மாக 16 லாரி​களில் தற்​காலிக இரும்பு பாலங்​கள் அமைப்​ப​தற்​கான உபகரணங்​கள், பொருட்​கள் நேபாளத்​துக்​கு அனுப்​பி வைக்​கப்​பட்​டு உள்​ளன.

SCROLL FOR NEXT