இந்தியா

அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட செயலா? - இத்தாலி நாளிதழுக்கு இந்தியா பதிலடி!

டெக்ஸ்டர்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜூன் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக இத்தாலியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்திக்கு, இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

"விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், ஆதாரமற்ற தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தும்" என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 

          

இத்தாலியின் கோரியர் டெல்லா செரா என்ற நாளிதழ் வெளியிட்ட அந்த செய்தியில், இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை என்றும், விமானி ஒருவர் வேண்டுமென்றே எரிபொருள் சுவிட்சை அணைத்ததால் நேர்ந்தது என்றும் குற்றம் சாட்டியிருந்தது. 

மேலும், அந்த விமானி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தச் செய்தியைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு, "இந்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. இத்தாலி நாளிதழின் கூற்று முற்றிலும் தவறானது. அவை வெறும் ஊகங்கள் மட்டுமே" என்று தெரிவித்துள்ளது. 

மேலும், இந்திய விமானிகள் கூட்டமைப்பு உயிரிழந்த விமானிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகைய செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT