இந்தியா

உலகின் மருந்தக ஆராய்ச்சி மையம் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய மருந்​துத் துறை, உலகின் மருந்​தகம் என்ற நிலை​யி​லிருந்​து, தற்​போது உலகளா​விய ஆராய்ச்சி மற்​றும் கண்டு​பிடிப்​பு​களின் மைய​மாக உரு​வெடுத்​துள்​ள​தாக பிரதமர் நரேந்​திர மோடி நேற்று பெரு​மிதம் தெரி​வித்​தார்.

மத்​திய சுகா​தா​ரத் துறை அமைச்​சர் ஜே.பி.நட்டா எழு​தி​யுள்ள கட்டுரை ஒன்​றைப் பகிர்ந்​துள்ள பிரதமர், தனது எக்ஸ் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா இப்​போது மலிவு விலை​யில் மருந்​துகளை வழங்​கும் உலகளா​விய விநி​யோகஸ்​தர் என்ற நிலை​யைக் கடந்​து, ஆராய்ச்சி சார்ந்த வளர்ச்​சி​யில் தற்போது கவனம் செலுத்​தத் தொடங்​கி​யுள்​ளது. உலகின் மருந்தகம் என்ற நிலை​யி​லிருந்து கண்​டு​பிடிப்​பு​களின் மைய​மாக இந்​தி​யா​வின் மருந்​துத் துறை முன்​னேறி வரு​கிறது.

          

தற்​போதைய அரசு, விரி​வான ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாடு, பயலாஜிக்​ஸ், பயோசிமிலர்ஸ் மற்​றும் அடுத்த தலை​முறைக்​கான நவீன சிகிச்சை முறை​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறது. மேலும், உலகளா​விய மருந்​துத் துறைப் போட்​டி​யில் இந்​தியா தன்னை எவ்​வாறு முன்​னிலைப்​படுத்தி வரு​கிறது என்பதை விவரிக்​கும் மத்​திய அமைச்​சர் நட்​டா​வின் இந்​தக் கட்டுரை, அனை​வரும் படிக்க வேண்​டிய ஒன்​று. இவ்​வாறு பிரதமர் தெரிவித்துள்​ளார்.

மத்​திய அரசின் தொடர்ச்​சி​யான கொள்கை ஆதரவு மற்​றும் தொலைநோக்​குப் பார்வை காரண​மாக, கடந்த சில ஆண்​டு​களில் இந்​திய மருந்​துத் துறை​யின் தடம் மாறி​யுள்​ளது. இந்​தியா இனி பொது​வான ‘ஜெனரிக்’ மருந்​துகளை அதிக அளவில் உற்​பத்தி செய்​வதுடன் மட்​டும் நின்​று​வி​டா​மல், காம்ப்​ளக்ஸ் மருந்து மேம்பாடு மற்​றும் மேம்​பட்ட ஆராய்ச்​சித் திறன்​களில் அதிக முதலீடு செய்து வரு​கிறது. குறிப்​பாக, உலகளா​விய மருந்​துத் துறை​யின் அடுத்​தகட்ட வளர்ச்​சி​யைத் தீர்​மானிக்​கக் கூடிய பயலாஜிக்ஸ் போன்ற பிரிவு​களில் இந்​தியா அதிக கவனம் செலுத்தி வரு​கிறது.

ஜெனரிக் மருந்து உற்​பத்​தி​யில் முன்​னிலை வகித்​த​தால் நீண்​ட​கால​மாக இந்​தியா உலகின் மருந்​தகம் என்று அழைக்​கப்​பட்​டது. தற்​போது, அந்த வளர்ச்​சியி​லிருந்​து, புத்​தாக்​கம் மற்​றும் கண்​டு​பிடிப்​பு​களை நோக்​கிய வளர்ச்​சிக்கு மாற இந்​தியா தயாராகிவிட்டது என்று மத்​திய அமைச்​சர் நட்டா தனது கட்டுரையில்​ குறிப்​பிட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT