இந்தியா

“யுஎஸ், சீனாவை பின்பற்றவில்லை; உண்மையான தேவைக்காகவே கட்டமைப்புகளை உருவாக்குகிறது இந்தியா” - கவுதம் அதானி

சிஐஐ ஆண்டு கூட்டத்தில் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்கா அல்​லது சீனாவை பின்​பற்​றாமல் உண்மை​யான தேவைக்​காக இந்​தியா கட்​டமைப்​பு​களை உருவாக்​கு​கிறது என தொழில​திபர் அதானி தெரிவித்துள்ளார்.

சிஐஐ அமைப்பின் வருடாந்திர கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தொழில​திபர் அதானி பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தியா பின்​பற்​றும் வழி அமெரிக்கா அல்​லது சீனா​வின் வழி​யாக இருக்​காது. ஒரு கற்​பனை​யான எதிர்​காலத்​துக்​காக நாம் எதை​யும் உரு​வாக்​கு​வ​தில்​லை. இந்​தி​யா​வின் தேவைக்​காக நாங்​கள் அனைத்​தை​யும் உரு​வாக்​கு​கிறோம். மக்​களின் தேவை​கள் அதி​கரிக்​கின்​றன. நகரங்​கள், தொழிற்​சாலைகள் விரிவடைந்து வரு​கின்​றன.

வாக​னங்​கள் மின்​மய​மாகி வரு​கின்​றன. லட்​சக்​கணக்​கான சிறு நிறு​வனங்​கள் வளர்ச்​சிக்​காக காத்​திருக்​கின்​றன. இவற்​றுக்​காக இந்​தி​யா​வில் தேவை​யான கட்​டமைப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்டு வரு​கின்​றன. நாம் எதை உரு​வாக்​கி​னாலும், அதற்​கான தேவை இங்கு ஏற்​கெனவே உள்​ளது என்​பதே நம் பலம். அந்​தத் தேவைக்கு ஏற்ப நமது கட்​டமைப்பை மேம்​படுத்​து​வது நமது கடமை. எரி சக்​தித் துறை​யில் இந்​தியா வியக்​கத்​தக்க முன்​னேற்​றத்தை எட்​டி​யுள்​ளது.

மார்ச் 2026 நில​வரப்​படி, இந்​தி​யா​வின் மின் உற்​பத்​தித் திறன் 500 ஜிகா​வாட்​டைத் தாண்​டி​யுள்​ளது. இந்​தத் திறனில் 53% கடந்த 10 ஆண்​டு​களில் மட்​டுமே சேர்க்​கப்​பட்​டுள்​ளது. அடுத்த 20 ஆண்​டு​களில் இந்​தத் திறனை மேலும் 4 மடங்கு அதி​கரித்​து, 2047-க்​குள் 2,000 ஜிகா​வாட்​டாக உயர்த்த இந்​தியா சரி​யான பாதை​யில் சென்று கொண்​டிருக்​கிறது. இது சாதாரன முன்​னேற்​றம் அல்ல. இது நாட்டை முன்​னேற்​றும் செயல்​பாடு.

ஒரே நேரத்​தில் அதிவேக வளர்ச்​சி, தொழில்​மய​மாக்​கல், பிரம்​மாண்​ட​மான டிஜிட்​டல் மயமாக்​கல் மற்​றும் அர்த்​த​முள்ள வகை​யில் கார்​பன் குறைப்பு நடவடிக்​கையை மேற்​கொள்​கிறாம். இந்த வளர்ச்சி கதைக்கு நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி பாதையே சிறந்த உதா​ரண​மாக உள்​ளது. சுதந்​திரத்​துக்​குப்​பின் இந்​தியா 2 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ர​மாக மாற 67 ஆண்​டு​கள் ஆனது. ஆனால், அடுத்த 2 டிரில்​லியன் டாலர்​களைச் சேர்க்க வெறும் 12 ஆண்​டு​களே ஆனது.

இங்கு சாலை, துறை​முகம், விமான நிலை​யம், தொழிற்​சாலை, எரிசக்தி உற்​பத்தி மையங்​கள் மற்​றும் தரவு மையம் ஆகியவை அடுத்த கட்ட வளர்ச்​சி​யைத் தூண்​டு​கின்​றன. இது ஒரு நாட்​டின் கூட்டு வலிமை. இந்த வேகத்​தில் சென்​றால், இந்​தியா வளர்​சி​யடைந்த நாடாக மாறும். இந்​தி​யா​வில் ஸ்மார்ட்போன் புரட்சி ஏற்​பட்டு டேட்டா விலை குறைந்​தது. இதே​போல் செயற்கை நுண்​ணறி​வும் (ஏஐ) ஒரு எழுச்​சியை உரு​வாக்​கும். ஆனால் இந்த எழுச்​சிக்கு அதிக மின்​சா​ரம் தேவைப்​படும்.

2030-க்​குள் 5 ஜிகா​வாட்​டாக இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படும் தரவு மையத் திறன் 2047-க்​குள் சுமார் 75 ஜிகா​வாட்​டாக உயரக்​கூடும். அதற்கு இந்​தியா இப்​போதே தயா​ராக வேண்​டும். செயற்கை நுண்​ணறி​வின் வரவு, தொழிலா​ளர்​களை நீக்​கும் என உலகளா​விய கருத்து நில​வு​கிறது. இதை நான் முற்​றி​லும் நிராகரிக்​கிறேன். உற்​பத்​தித் திறனைப் பெருக்​கி, புதிய வேலைகளை உரு​வாக்​கும் மற்​றும் சிறு வணி​கங்​களை வலுப்​படுத்​தும் சக்​தி​யாக இந்​தி​யா ஏஐ-யை கட்​டமைக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT