இந்தியா

காங்​கோ​வில் எபோலா வைரஸ் பரவல் காரண​மாக இந்​தியா - ஆப்பிரிக்க ஒன்​றிய உச்சி மாநாடு ஒத்​திவைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தியா, ஆப்​பிரிக்க ஒன்​றி​யம் ஆகிய இரு தரப்​பும் இணைந்து 4-வது இந்​தி​யா-ஆப்​பிரிக்கா உச்சி மாநாட்டை டெல்லியில் மே 28-ம் தேதி முதல் நடத்​து​வதற்​குத் தயா​ராகி வந்தன. இந்​நிலை​யில், ஆப்​பிரிக்​கா​வின் பல பகு​தி​களில் கொடிய எபோலா வைரஸ் பாதிப்​பு​கள் பதி​வாகி​யுள்​ளன.

குறிப்​பாக, காங்கோ ஜனநாயகக் குடியரசில் ‘பண்​டிபு​கியோ’ என்ற அரிய வகை எபோலா வைரஸ் பரவி வரு​கிறது. அங்கு இதுவரை 130-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். இதையடுத்து, உலக சுகா​தார அமைப்பு சர்​வ​தேச சுகா​தார அவசர நிலையை அறி​வித்​துள்​ளது. இதன் காரண​மாக, இந்​தி​யா-ஆப்​பிரிக்கா அமைப்பின் உச்சி மாநாடு கால​வரை​யின்றி ஒத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. ஆப்​பிரிக்க ஒன்​றி​யத் தலை​வர்​களு​டன் கலந்​தாலோ​சித்து இந்த முடிவை இந்​திய அரசு எடுத்​துள்​ளது.

இந்​தி​யா​வில் இது​வரை எபோலா பாதிப்பு எது​வும் கண்டறியப்படவில்​லை. இருப்​பினும், முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை​யாக விமான நிலை​யக் கண்​காணிப்​பு, பரிசோதனைகள் மற்​றும் தனிமைப்​படுத்​துதல் நெறிமுறைகளைத் தீவிரப்​படுத்​து​மாறு அனைத்து மாநிலங்​களுக்கும் மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது. மாநாட்​டுக்​கான புதிய தேதி​கள் பின்​னர் அறிவிக்​கப்​படும்​ எனத்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT