இந்தியா

நீட் தேர்வு விடைத் தாள்களில் முரண்பாடுகள்: உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வு அசல் ஓஎம்​ஆர் தாளில் குறிப்பிடப்பட்டிருந்த பதில்​களுக்​கும், தேசிய தேர்வு முகமை​யால் இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்ட ஓஎம்​ஆர் தாள்​களில் உள்ள பதில்​களுக்​கும் இடையே முரண்​பாடு​கள் இருப்​ப​தாகக்​கூறி, நீட் தேர்வு எழு​திய மாணவர்​கள் சிலர் உச்​ச நீ​தி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​துள்​ளனர்.

இப்​பிரச்​சினைக்கு தீர்​வு​காண தேசிய தேர்​வு​கள் முகமையை பலமுறை அணுகி​யும் எந்த நிவாரண​மும் கிடைக்​க​வில்​லை, நேரடி​யாக தேசிய தேர்​வு​கள் முகமை அலு​வல​கத்​துக்கு சென்ற போதும் நிவாரணம் கிடைக்​க​வில்​லை’ என, மனு​வில் மாணவர்கள் தெரி​வித்​திருந்​தனர்​.

இந்த மனுவை விரைந்து விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளு​மாறு உச்​ச நீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்பு நேற்று முறை​யிடப்​பட்​டது. நீட் கலந்​தாய்வு செயல்​முறை ஏற்​க​னவே நடை​பெற்று வரு​வ​தால் வழக்கை விரைந்து விசா​ரணைக்கு எடுக்க வேண்​டும் என கோரி்னர். அ்தை ஏற்​றுக் கொண்ட தலைமை நீதிப​தி, மனுவை வி​சா​ரணைக்​குப் பட்​டியலிடு​வ​தாக உறு​தி​யளித்​தா​ர்​.

SCROLL FOR NEXT