இந்தியா

மேற்கு வங்க பள்ளிகளில் பயோமெட்ரிக் அமல்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்குவங்க அரசு பள்ளிகளில் வரும் ஜனவரி முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் தீபக் பர்மான் கூறியதாவது: மேற்குவங்கம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 69,000 தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இந்த பள்ளிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம் அமல் செய்யப்படும். தற்போது சோதனை அடிப்படையில் 150 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் அமல் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT