இந்தியா

மேற்கு வங்கத்தில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்ப எல்லையில் குவியும் சட்டவிரோத வங்கதேச மக்கள்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்​கு​ வங்​கத்​தில் அண்​மை​யில் நடை​பெற்ற சட்டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்​துள்​ளது.

அந்த மாநில முதல்​வர் சுவேந்து அதி​காரி கூறும்​போது, “மேற்​கு வங்​கத்​தில் சட்​ட​விரோத​மாக குடியேறிய வங்​கதேச மக்​கள் அடுத்த 30 நாட்​களுக்​குள் வெளி​யேற்​றப்​படு​வார்​கள். இதற்​காக ‘‘கண்​டறிதல், நீக்​குதல், வெளி​யேற்​று​தல்’’ திட்​டம் செயல்படுத்தப்படு​கிறது. பிடிபடும் வங்​கதேச மக்​கள் எல்​லைப் பாது​காப்​புப் படை (பிஎஸ்​எப்) வீரர்​கள் மூலம் வங்​கதேசத்​திடம் ஒப்படைக்​கப்​படு​வார்​கள்’’ என்று தெரி​வித்​தார்.

மேலும் அனைத்து மாவட்​டங்​களி​லும் சிறப்பு தடுப்பு மையங்களை அமைக்​க​வும் முதல்​வர் சுவேந்து உத்தரவிட்டுள்ளார். பாது​காப்​புப் படை​யினரின் சோதனையில்சிக்​கும் வங்​கதேச மக்​கள், இந்த சிறப்பு தடுப்பு மையங்​களில் அடைக்​கப்​படு​வார்​கள். மாவட்ட ஆட்​சி​யரின் விசாரணைக்​குப் பிறகு அவர்​கள் பிஎஸ்​எப் படை​யிடம் ஒப்படைக்கப்பட உள்​ளனர். அந்த மாநிலத்​தில் தற்​போது சட்​ட​விரோத குடியேறிகளை கண்​டறி​யும் பணி தீவிரப்​பட்டு உள்​ளது.

இதன்​காரண​மாக கடந்த இரு வாரங்​களில் மட்​டும் சுமார் 26,000-க்கும் மேற்​பட்​டோர் தாங்​களாகவே வங்​கதேசத்​துக்கு தப்​பிச் சென்று விட்​ட​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இந்த சூழலில் வடக்கு 24 பர்​கானஸ் மாவட்​டத்​தின் ஹக்​கிம்​பூர் எல்​லைப் பகுதியில் நூற்​றுக்​கணக்​கான வங்​கதேச மக்​கள் குவிந்து வருகின்றனர். பரிசோதனை​களுக்​குப் பிறகு அவர்​கள் வங்​கதேச எல்​லைப் பாது​காப்​புப் படை வீரர்​களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று பிஎஸ்​எப் அதி​காரி​கள் தெரிவித்துள்​ளனர்.

இதுகுறித்து மேற்​கு ​வங்க அரசு வட்​டாரத்தினர் கூறும்போது, ‘‘சட்​ட விரோத​மாக குடியேறிய வங்​கதேச மக்​களை தங்க வைக்க அனைத்து மாவட்​டங்​களி​லும் சிறப்பு தடுப்பு மையங்​கள் அமைக்கப்​பட்டு உள்​ளன. சட்​ட​விரோத​மாக குடியேறிய வங்​கதேச மக்​கள், நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்பட மாட்​டார்​கள். பிடிபடும் வங்​கதேச மக்​கள் நேரடி​யாக பிஎஸ்​எப் படை​யிடம் ஒப்படைக்கப்பட்​டு, வங்​கதேசத்​துக்கு அனுப்​பப்​படு​வார்​கள்’’ என்றனர்.

SCROLL FOR NEXT