புதுடெல்லி: கேரள மாநிலத்தின் இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் விவகாரத்தில் முதல்வரும், ஆளுநரும் உடன்படாவிட்டால் உச்ச நீதிமன்றமே துணைவேந்தரை நியமிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் ஏபிஜெ அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கேரள எண்ம அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல்-தேர்வு குழு தலைவராக முன்னாள் நீதிபதி சுதான்ஷு துலியாவை உச்ச நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த 2 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்கள் பெயர்களை முன்னாள் நீதிபதி சுதான்ஷு துலியா பரிந்துரைத்தும், வேந்தரான கேரள ஆளுநர் செய்யும் தாமதம் தொடர்பான கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, பி.பி. வார்லே அடங்கிய அமர்வு விசாரித்தது.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, கேரளத்தின் இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் விவகாரத்தில் முதல்வரும், ஆளுநரும் உடன்படாவிட்டால் உச்ச நீதிமன்றமே துணைவேந்தர்களை நியமிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.