இந்தியா

ஜெயலலிதா வீட்டுக்கு சீல்: ரூ.83 லட்சம் வரி பாக்கிக்காக ஹைதராபாத் மாநகராட்சி நடவடிக்கை

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: கடந்த 9 ஆண்​டு​களாக வரி பாக்கி செலுத்தாததற்காக தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதாவுக்கு சொந்​த​மான ஹைத​ரா​பாத்​தில் உள்ள வீட்டுக்கு மாநக​ராட்சி அதி​காரி​கள் நேற்று ‘சீல்’ வைத்​தனர்.

தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தாவுக்கு ஹைத​ரா​பாத்​தில் திராட்சை தோட்​டம் மற்​றும் யூசஃப்​கூடா சர்​க்கிள் - 38, ஸ்ரீநகர் காலனி​யில் 4 அடுக்கு மாடி சொகுசு வீடு உள்​ளது. இந்த வீட்​டின் எண் 8-3-1099-ஏ ஆகும். இந்த வீட்​டில் சில ஆண்​டு​களுக்கு முன்​னர் தனி​யார் அலு​வல​கத்​தின் பணி​கள் நடை​பெற்று வந்​தன.

          

இந்​நிலை​யில், ”கடந்த 2017ம் ஆண்டு முதல் இதை வீடாக உபயோகப்​படுத்தி வரு​கிறோம். அதன்​படி வரி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று ஜெயலலி​தா​வின் உறவினர் தீபக் ஜெயக்​கு​மார், ஹைத​ரா​பாத் மாநக​ராட்​சிக்கு விண்ணப்பித்திருந்​தார்.

ஆனால், கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த வீட்​டுக்கு யாரும் வரி செலுத்த முன்​வ​ராத காரணத்​தால் இது​வரை ரூ.82,91,822 வரி பாக்கி செலுத்த வேண்டி உள்​ளது. இது தொடர்​பாக கடந்த பிப்ரவரி மாதம் ஹைத​ரா​பாத் மாநக​ராட்​சி​யின் உதவி ஆணையர் சுரேஷ், ஜெயலலி​தா​வின் உறவினர்​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பி​னார்.

ஆனால், மார்ச் 31ம் தேதி இதற்​கான கடைசி நாள் என்​ப​தால், இது​வரை யாரும் அந்த வீட்​டுக்கு வரி செலுத்​த​வில்​லை. இதையடுத்​து, ஹைத​ரா​பாத் மாநக​ராட்சி ஏஎம்சி பால்​ராஜ் தலை​மை​யில் சென்ற ஊழியர்​கள் ஜெயலலி​தா​வின்​ வீட்​டிற்​கு ‘சீல்​’ வைத்​தனர்​.

SCROLL FOR NEXT