இந்தியா

பெண் வழக்கறிஞரை கத்தியால் குத்திய கணவர்: தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்​ச நீ​தி​மன்​ற வழக்​கறிஞர் சினேகா கலி​தா, டெல்லி காஜுரி​ காஸில் உள்ள வீட்​டில் கணவ​ரால் கத்​தி​யால் குத்தி தாக்கப்​பட்​டார்.

இது குறித்து உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு புகைப்பட ஆதா​ரங்​களு​டன் கடிதம் எழு​தி​னார். அதில், இந்த விவ​காரத்தை தாமாக முன் வந்து விசா​ரிக்க வேண்​டும், குற்​றம்​சாட்​டப்​பட்ட நபரை உடனடியாக கைது செய்ய டெல்லி காவல்​துறைக்கு உத்தரவிட வேண்​டும் என கோரி​யிருந்​தார். இதையடுத்து உச்​ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​குப்​ப​திவு செய்​தது.

இந்த வழக்கை உச்​ச நீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு நேற்று விசா​ரித்​தது. டெல்லி காவல்​துறை சார்​பாக கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஐஸ்​வர்யா பாட்டி ஆஜராகி வாதாடினார். அப்போது இந்த விவ​காரம் தொடர்​பாக காஜுரி காஸ் காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டு, குற்​றம்​சாட்​டப்​பட்ட நபர் கடந்த 25ம் தேதி இரவு கைது செய்யப்பட்டு இருப்​ப​தாக​வும், மாம​னார், மாமி​யார் தலைமறைவாக இருப்​ப​தாக​வும் தெரி​வித்​தார்.

இந்த வாதங்​களை கேட்ட உச்​ச நீ​தி​மன்​றம், இந்த வழக்கை உதவி காவல் ஆணை​யர் அல்​லது துணை காவல் ஆணை​யர் அந்தஸ்தில் உள்ள பெண் அதி​காரியை கொண்டு விசா​ரிக்க டெல்லி காவல் ஆணை​யருக்கு உத்​தர​விட்​டது.

SCROLL FOR NEXT