இந்தியா

ஆபரேஷன் மஹாதேவ் மூலம் பஹல்காம் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டது எப்படி?

இன்று பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு நாள்

செய்திப்பிரிவு

ஜம்மு - காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் அப்​பாவி சுற்​றுலாப் பயணி​கள் மீது நடத்​தப்​பட்ட கொடூர​மான தீவிர​வாதத் தாக்​குதல் ஒட்​டுமொத்த தேசத்​தை​யும் அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யது.

இதில் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து ராணுவ வட்​டாரங்​கள் கூறி​யிருப்​ப​தாவது: மத அடை​யாளத்​தின் அடிப்​படை​யில் அப்​பா​விப் பொது​மக்​கள் குறி​வைத்து கொல்​லப்​பட்ட இந்த சம்​பவம் ராணுவத்​திற்​கு ஒரு சவாலாகவே அமைந்​தது. ஆனால், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நீதி வழங்​கப்பட வேண்​டும் என்​ப​தில் மட்​டும் ராணுவம் உறு​தி​யாக இருந்து ஆபரேஷன் மஹாதேவை முன்​னெடுத்​தது.

பஹல்​காம் தாக்​குதல் நடந்த சில மணி நேரங்​களி​லேயே ராணுவத்​தினர் சம்பவ இடத்​திற்​குச் சென்று ஆய்வு நடத்​தினர். அங்​கிருந்த சாட்​சிகளின் வாக்​குமூலங்​கள் அடிப்​படை​யில், இத்​தாக்​குதலில் 3 பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் ஈடு​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. மனிதவள உளவு மற்​றும் தொழில்​நுட்ப உளவு தகவல்​களை ஒருங்​கிணைத்​த​தில், லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பைச் சேர்ந்த சுலை​மான் ஷா, ஹம்சா ஆப்​கானி மற்​றும் ஜிப்​ரான் பாய் ஆகியோரே இக்​கொடூரத்​தின் பின்​னணி​யில் இருந்​தது தெரிய​வந்​தது.

இதனைத் தொடர்ந்​து, சமீப காலங்​களில் இல்​லாத வகை​யில் மிக​வும் ஒருங்​கிணைக்​கப்​பட்ட தேடு​தல் வேட்டை தொடங்​கியது. தீவிர​வா​தி​கள் பள்​ளத்​தாக்கை விட்டு வெளி​யேறாத​படி எல்​லைகள் சீல் வைக்​கப்​பட்​டன. தெற்கு காஷ்மீரின் ஹபட்​னர், புக்​மார் மற்​றும் ட்ரால் ஆகிய உயர​மான பகு​தி​கள் வழி​யாக அவர்​கள் தப்​பிச் செல்​வதை ராணுவம் கண்​டறிந்​தது. அடர்ந்த காடு​கள் மற்​றும் கரடு​முர​டான டச்​சி​காம் வனப்​பகு​திக்​குள் அவர்​கள் தஞ்​சம் புகுந்​தனர்.

மே மாத இறு​தி​யில், தீவிர​வா​தி​கள் இந்த கடின​மான நிலப்​பரப்​பைப் பயன்​படுத்தி தப்​பிக்க முயல்​வதும், வரவிருக்​கும் ஆண்டு யாத்​திரைக்கு இடையூறு விளைவிக்க அவர்​கள் திட்​ட​மிடு​வதும் உறு​தி​யானது. நிலை​மை​யின் தீவிரத்தை உணர்ந்த ராணுவம், தேடு​தல் வேட்​டையைத் தீவிரப்​படுத்​தி​யது. இதில் எலைட் பாரா சிறப்​புப் படைப் பிரி​வினர் களமிறக்​கப்​பட்​டனர்.

இந்த ஆபரேஷனில், ராணுவம், ஜம்மு - காஷ்மீர் போலீஸ் மற்​றும் மத்​திய பாது​காப்​புப் படைகள் ஒன்​றிணைந்து செயல்​பட்​டன. ட்ரோன்​கள், தொலை​தூரத்​தில் இருந்து இயக்​கப்​படும் விமானங்​கள் மற்​றும் எலக்ட்​ரோ-ஆப்​டிகல் சென்​சார்​கள் போன்ற நவீன கருவி​கள் மூலம் தீவிர​வா​தி​களின் நடமாட்​டம் துல்​லிய​மாகக் கண்​காணிக்​கப்​பட்​டது.

ஜூலை 10, 2025 அன்று ஆபரேஷன் மஹாதேவ் அதன் இறுதி கட்​டத்தை எட்​டியது. லிட்​வாஸ், ஹர்​வான் மற்​றும் டச்​சி​காம் பகு​தி​களில் பெரிய அளவி​லான சுற்​றிவளைப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. 93 நாட்​கள் நீடித்த இந்த வேட்​டை​யில், சுமார் 250 கி.மீ தூரம் வரை தீவிரவாதி​கள் துரத்​தப்​பட்​டனர். இறு​தி​யில் அவர்​கள் 25 சதுர கிலோமீட்​டர் பரப்​பள​விற்​குள் சுற்​றிவளைக்​கப்​பட்​டனர்.

ஜூலை 28, 2025 அன்​று, பாரா சிறப்​புப் படை குழு​வினர் மிக​வும் ரகசி​ய​மான முறை​யில் தாக்​குதலைத் தொடங்​கினர். உயிரைப் பணயம் வைத்​து, கரடு​முர​டான பாதை​யில் 10 மணி நேரம் சுமார் 3 கிலோமீட்​டர் தூரம் நடந்தே சென்று தீவிர​வா​தி​களை நெருங்​கினர். மின்​னல் வேகத்​தில் நடத்​தப்​பட்ட இந்த துல்​லிய​மான தாக்​குதலில் மூன்று தீவிர​வா​தி​களும் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

இதன் மூலம் பஹல்​காம் படு​கொலைக்​குக் காரண​மானவர்​கள் நீதி​யின் முன் தண்​டிக்​கப்​பட்​டனர். ராணுவத்​தின் மன உறு​தி, தொழில்​முறை நேர்த்தி மற்​றும் தேசப் பாது​காப்​பிற்​கான அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றிற்கு ஆபரேஷன் மஹாதேவ் ஒரு மிகச் சிறந்​த எடுத்​துக்​காட்​டாக உள்​ளது. இவ்​வாறு ராணுவ வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT