இந்தியா

மகளிர் இடஒதுக்கீட்டை நியாயமாக செயல்படுத்துவது எப்படி?

- சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ஜேஎன்யு முன்னாள் பேராசிரியர் (பொருளாதாரம்)

Guest Author

பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த, மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 50% அல்லது 272 அதிகரித்து 816 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது (இன்று முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றச் சிறப்புத் கூட்டத்தொடரின்போது இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட உள்ளது). இந்த இடஒதுக்கீடு தற்போதைய மக்களவை உறுப்பினர்களைப் பாதிக்காது என்பதை இது குறிக்கிறது (ஏனெனில் 272/816 = 1/3 பங்கு).

மக்களவையின் எண்ணிக்கையை 50% அதிகரிக்காமலேயே, மக்களவையில் (சட்டப் பேரவைகளில்) பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நியாயமான முறையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் இந்தக் கட்டுரையில் விளக்கப்படுகிறது. இருப்பினும், செயல்படுத்துவதற்கு மிக எளிதான, நியாயமான ஒரு திட்டமும் இக்கட்டுரை வழங்குகிறது.

          

543 ஆகவே தொடர்ந்தால்...

மக்​களவை​யின் எண்​ணிக்​கையை இப்​போது உள்ள 543-ஐ மாற்றாமல் அப்​படியே வைத்​திருக்க வேண்​டும் என்று தமிழக முதல்​வர் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளார். இதன்​படி, இடஒதுக்​கீடு என்​பது தற்​போதுள்ள இடங்​களுக்​குள்​ளேயே இருந்​தாக வேண்​டும். அதற்கான மாற்று அணுகு​முறை​கள் பின்​வரு​மாறு இருக்​கலாம்:

1. தொகு​தி​களின் சுழற்சி முறை இடஒதுக்​கீடு: ஒவ்​வொரு தேர்​தலிலும் சுமார் 181 தொகு​தி​கள் (543-இல் 1/3 பங்​கு) பெண்​களுக்​காக ஒதுக்​கப்​படும். இந்த தொகு​தி​கள் ஒவ்வொரு தேர்​தலிலும் சுழற்சி முறை​யில் மாறும். அப்போது பெண்​களுக்​கான தொகு​தி​களில் ஆண்​கள் போட்​டி​யிட முடி​யாது. இந்த முறை​யின் ஒரு வடிவம் தற்போது 1992-ம் ஆண்​டின் 73 மற்​றும் 74-வது அரசியலமைப்​புத் திருத்​தங்​களின்​படி, பஞ்​சா​யத்து மற்றும் நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​களில் பெண்களுக்கான வார்​டு​களைச் சுழற்சி முறை​யில் ஒதுக்கப் பயன்​படுத்​தப்​படு​கிறது.

இந்த அணுகு​முறை​யில் சில அபா​யங்​கள் உள்​ளன. ஒன்​று, இது பதவி​யில் இருப்​பவர்​களின் தொடர்ச்​சி​யைப் பாதிக்கிறது. தொகு​தி​யின் மீதான அவர்​களின் அர்ப்பணிப்​பைக் குறைக்​கிறது. மேலும் இது பொறுப்புணர்வைக் குறைக்கலாம்.

2. இரட்டை உறுப்​பினர் தொகு​தி​கள்: சில தொகு​தி​கள் ஒருவருக்குப் பதிலாக இரு எம்​.பி.க்​களைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்​தல் முறையையே மாற்றி அமைக்க வேண்​டி​யிருப்​ப​தால் இதைச் செயல்​படுத்​து​வது சிக்​கலானது. தவிர, இத்​தகைய யோசனைக்கு எதி​ரான வலு​வான வாதம் என்​னவென்​றால், இது சமமற்ற தொகுதி பிர​தி​நி​தித்​து​வத்​துக்கு வழி​வகுக்​கும்.

3. கட்சி மட்​டத்​திலான வேட்​பாளர் ஒதுக்​கீடு: சட்​டத்​தின் மூலம் இதை நடை​முறைப்​படுத்​தலாம் (பாகிஸ்​தானில் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது). இதன்​படி, அரசி​யல் கட்​சிகள் அனைத்து தொகு​தி​களி​லும் குறைந்​த​பட்​சம் 33% பெண் வேட்​பாளர்​களை நிறுத்த வேண்​டும். இந்த முறை கட்சி கட்டமைப்​பு​களில் முறை​யான மாற்​றத்தை ஊக்​குவிக்​கும். இருப்​பினும், தேர்​தல் முடிவு​களைப் பொறுத்தே இது அமைவ​தால், மக்​களவை​யில் 33% பெண் எம்​பிக்​கள் இருப்பார்​கள் என்​ப​தற்கு உத்​தர​வாதம் அளிக்​காது.

4. டாப்​-அப் விகி​தாச்​சார இடங்​கள்: தேர்​தலுக்​குப் பிறகு, இடங்​களை உட்​புற​மாக சரிசெய்​ய​லாம். அதாவது, 2024 மக்கள​வைத் தேர்​தலில் பெண்​களின் பிர​தி​நி​தித்​து​வம் 14% ஆக இருந்​தது. அது 33%-க்​கும் குறைவு. இது​போன்ற சூழ் நிலை​யில், கட்​சிப் பட்​டியல்​கள் அல்​லது நியமனம் மூலம் சில இடங்​களை மீண்​டும் ஒதுக்​கலாம். இருப்​பினும், இது இந்​தி​யா​வின் தற்​போதைய ‘முதலில் வருபவருக்கே வெற்றி' (எப்​பிடிபி) முறையைச் சிக்​கலாக்​கும்.

எனவே, மக்​களவை எண்​ணிக்​கையை 543 ஆகவே வைத்துக்​கொண்டு இந்த முறை​களில் எதைச் செயல்​படுத்​தி​னாலும் சிக்​கல்​கள் ஏற்​படும். விகி​தாச்​சார பிரதிநிதித்துவ முறைமகளிர் இடஒதுக்​கீட்​டைச் செயல்​படுத்​து​வதற்​கான 2-வது வடிவம், மக்​களவை உறுப்​பினர் எண்​ணிக்​கையை அதி​கரித்​து, விகி​தாச்​சார பிரதிநிதித்துவ முறையை (பிஆர்) நிறு​வுவ​தாகும்.

இருப்​பினும், இந்த முறை தற்​போதைய எப்​பிடிபி முறைக்குத் துணை​யாக இருக்​குமே தவிர, அதை மாற்றாது. தற்​போதைய எப்​பிடிபி முறை​யுடன் ஒரு பிஆர் அடுக்​கை​யும் சேர்த்​து, மூன்​றில் ஒரு பங்கு பெண்​களின் பிர​தி​நி​தித்​து​வத்தை அடைவது சாத்​தி​ய​மானது. இது மிகவும் எளி​தானது. பிஆர் முறை​யில், கட்​சிகள் தரவரிசைப்​படுத்​தப்​பட்ட வேட்​பாளர் பட்​டியலைச் சமர்ப்பிக்​கும்.

மேலும் வாக்கு விகிதத்​தின் அடிப்​படை​யில் இடங்​கள் ஒதுக்​கப்​படும். இது பாலின சமநிலையை உறுதி செய்கிறது. கட்​சிகளின் வேட்​பாளர் பட்​டியல்​களில் கட்டாய​மாக 1/3 பங்கு பெண்​கள் இருக்க வேண்​டும். இந்த பிஆர் முறை​யில் வேட்​பாளர்​களில் 33% பெண்​கள் இருக்க வேண்​டும் என்று சட்​டம் இயற்ற வேண்​டும்.

பெண்​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட டாப்​-அப் பிஆர் இடங்களை பரிந்​துரைக்​கிறோம். அதாவது தற்​போதைய 543 தொகு​தி​கள் மகளிர் இடஒதுக்​கீட்​டால் பாதிக்கப்படாமல் அப்​படியே இருக்​கும். பெண்​களுக்கு 33% பிர​தி​நி​தித்​து​வம் கிடைக்​காத பட்​சத்​தில், அந்​தப் பற்​றாக்​குறையை ஈடு​கட்ட பிஆர் இடங்​கள் சேர்க்​கப்​படும். இது ஜெர்​மனி, நியூசிலாந்​தில் உள்ள கலப்பு முறை​களைப் போன்​றது (அங்கு பிர​தி​நி​தித்​து​வத்​துக்​காகப் பயன்​படுத்தப்​படு​கிறது).

எப்​பிடிபி முறையை விட பிஆர் சிறந்​தது

மக்​களவை​யில் பயன்​படுத்​தப்​படும் எப்​பிடிபி முறை​யில், தொகுதிகளைப் பெண்​களுக்​காக ஒதுக்​கலாம். ஆனால் அது வாக்காளர்​களின் விருப்​பத்​தைத் தடுக்​கிறது; சுழற்சி முறை தேவைப்​படு​கிறது. மேலும் வேட்​பாளர் ஒதுக்​கீடு மூலம் மட்​டும் முடிவு​களுக்கு உத்​தர​வாதம் அளிக்க முடியாது. இதற்கு நேர்​மாறாக, பிஆர் முறை​யில் இட ஒதுக்கீடு என்​பது கட்​சிப் பட்​டியலின் அளவில் கட்டுப்படுத்தப்​படு​வ​தால், பாலின ஒதுக்​கீட்டை கணித ரீதி​யாக​வும் வெளிப்​படை​யாக​வும் செயல்​படுத்த முடி​யும்.

பெரிய கட்​சிகள் வரலாற்று ரீதி​யாக பிஆர் முறையை எதிர்த்து வந்துள்​ளன. ஆனால், உலக நாடு​களின் எண்ணிக்​கை​யில் கால் பங்குக்கும் குறை​வான நாடு​களே எப்​பிடிபி முறையை மட்​டும் பின்பற்​றுகின்​றன. காலனித்துவ ஆட்​சி​யின் தாக்​கத்​தால் இந்​தியா சுதந்திரத்தின் போது எப்​பிடிபி முறையை ஏற்​றுக் கொண்டாலும், இது உலகள​வில் ஒரு சிறு​பான்மை முறை (25%). உண்​மை​யில், பிஆர் முறையே உலகள​வில் ஆதிக்கம் செலுத்​துகிறது (40%+), மேலும் கலப்பு முறை​கள் பெருகி வரு​கின்றன (20%).

2014 மக்​களவை பொதுத் தேர்​தல்

2014 மக்​களவை பொதுத் தேர்​தலில் பாஜக​வின் வாக்கு விகிதம் 31% ஆக இருந்​தது, ஆனால் அதன் இடங்​கள் 282/543 (52%) ஆக இருந்தது. வெறும் மூன்​றில் ஒரு பங்கு வாக்குகளுடன் பாஜக பெரும்​பான்மை பெற்​றது. அதேசமயம், இந்​திய தேசிய காங்​கிரஸ் 19% வாக்கு விகிதத்​தைப் பெற்​றிருந்​தும், வெறும் 44 இடங்​களை (8%) மட்​டுமே பெற்​றது. எனவே, எப்​பிடிபி முறையை பிஆர் முறையுடன் சேர்த்​துப் பயன்​படுத்த வேண்​டும் என்ற வாதத்தை முன்​வைக்​கலாம்.

எவ்​வாறு செயல்​படும்?

மொத்​த​முள்ள 216 பெண் உறுப்​பினர்​களில் 108 இடங்​களை தற்போதுள்ள 543 தொகு​தி​களில் இருந்து எப்​பிடிபி முறைப்​படி தேர்ந்​தெடுக்​கப்பட வேண்​டும். கூடு​தலாகச் சேர்க்​கப்​படும் 108 இடங்​களுக்கு (651 - 543 = 108)பிஆர் பட்​டியல் முறைப்​படி பெண்களைத் தேர்ந்​தெடுக்க வேண்​டும். இவ்​வாறு செய்​வதன் மூலம், சரி​பாதி பெண்​கள் தொகு​தி​களில் இருந்​தும் (எப்​பிடிபி), மீதமுள்ள பாதிப் பேர் கட்​சிப் பட்​டியல்​கள் (பிஆர்) மூல​மும் தேர்ந்​தெடுக்​கப்​படு​வார்​கள்.

ஒரு கூட்​டாட்சி நாட்​டில், பிஆர் முறை​யின் கீழ் பெண்​களுக்​கான கட்​சிப் பட்​டியல்​கள் தேசிய அளவிலா அல்​லது மாநில அளவிலா என்​ப​தைத் தீர்​மானிக்க வேண்​டும். மாநில அளவில் பெண் வேட்பாளர்​களைத் தேர்ந்​தெடுப்​பதே கூட்​டாட்​சித் தத்​து​வத்​துக்கு ஏற்​றது.

கலப்​புத் தேர்​தல் முறை

இதைச் செயல்​படுத்த, நாம் ஒரு கலப்பு முறையை வடிவ​மைக்க வேண்​டும். முதலா​வ​தாக அரசி​யலமைப்​புச் சட்​டம் 81-வது பிரிவை திருத்​தி, இடங்​களின் உச்ச வரம்பை 543-லிருந்து 651-ஆக உயர்த்த வேண்​டும். மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டத்தை திருத்​தி, எப்​பிடிபி + பிஆர் ஆகிய இரண்​டும் இணைந்த தேர்​தல் முறைக்கு வழி​வகை செய்ய வேண்​டும்.

இரட்டை வாக்கு முறை: ஒவ்​வொரு வாக்​காள​ருக்​கும் இரண்டு வாக்​கு​கள் இருக்​கும். ஒன்று தனது தொகுதி வேட்​பாள​ருக்கு (எப்​பிடிபி), மற்​றொன்று கட்​சிக்கு (பிஆர் இடங்​களுக்​காக). ஒவ்​வொரு கட்​சி​யும் மாநில வாரி​யாக பெண் வேட்​பாளர்​களின் பட்​டியலைச் சமர்ப்​பிக்​கும்.

எஸ்​சி/எஸ்டி இடஒதுக்​கீடு மற்​றும் மகளிர் இடஒதுக்​கீடு

தற்​போதைய 543 இடங்​களில் எஸ்சி பிரி​வினருக்கு 84 இடங்​களும், எஸ்டி பிரி​வினருக்கு 47 இடங்​களும் (மொத்​தம் 131) ஒதுக்கப்பட்டுள்​ளன. மகளிர் இடஒதுக்​கீடு வரும்​போது, இதி​லும் மூன்​றில் ஒரு பங்கு பெண்​களுக்கு வழங்​கப்பட வேண்​டும்.

கட்​சிகள் பிஆர் இடங்​களுக்கு பொதுப் பிரிவு, எஸ்சி பிரிவு, எஸ்டி பிரிவு என மூன்று பட்​டியல்​களைச் சமர்ப்​பிக்க வேண்​டி​யிருக்​கும்: இந்​தச் சட்​டக் கட்​டமைப்பு இந்​திய அரசி​யலமைப்பு மற்​றும் தேர்தல் ஆணை​யத்​தின் வி​தி​களு​டன்​ ஒத்​துப்போக வேண்​டும்​. அரசியல்​ கட்​சிகள்​ தேச நலன்​ கரு​தி இந்த முன்​மொழி​வு​களைப் பரிசீலிக்​கும்​ என்​று நம்புகிறோம்​.

கட்டுரையாளர்: சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ஜேஎன்யு முன்னாள் பேராசிரியர் (பொருளாதாரம்)

SCROLL FOR NEXT