இந்தியா

“பிரதமருடன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துங்கள்” - ராகுல் காந்திக்கு அசாம் முதல்வர் பதில்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமருடன் நாடாளு​மன்​றத்​தில்​தான் விவாதம் நடத்த வேண்​டும் என்​று ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இந்​தி​யா​வுக்கு எதிராக சிலர் வெளி​நாட்டு சக்​தி​களு​டன் இணைந்து செயல்​படுவ​தாக, பிரதமர் நரேந்​திர மோடி சில தினங்களுக்கு முன் ராகுல் காந்​தியை மறைமுக​மாக குற்​றம் சாட்டி இருந்​தார். இதற்கு பதிலளித்த ராகுல், “நீங்​கள்​தான் வெளிநாட்டு உதவியால் பிரதமர் ஆனீர்​கள், அவர்​களின் தய​வால்​தான் ஆட்​சி​யில் நீடிக்​கிறீர்​கள். இது​குறித்து என்​னுடன் நேருக்கு நேர் விவாதிக்​கத் தயாரா?” என சவால் விடுத்​தார்.

இதற்கு பதிலளித்துள்ள அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா,‘‘நாடாளு​மன்​றத்​தில் விவாதம் நடத்த வாருங்​கள். தெருக்களில் அல்ல. போஃபர்ஸ் விவகாரம் முதல் போபால் எரிவாயு துயரம் வரை, விவாதிப்​ப​தற்கு ஏராளமான பிரச்சினைகள் உள்​ளன,’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT