இந்தியா

7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? - கர்நாடக எய்ட்ஸ் தடுப்பு சங்கம் விளக்கம்

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் கல்​லூரி மாணவர்​கள் 7 ஆயிரம் பேருக்கு எச்​ஐவி தொற்று இருப்​பது உறு​தி​யான​தாக அண்​மை​யில் செய்​தி​கள் வெளி​யாகின.

இந்​நிலை​யில் கர்​நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்​கத்​தின் இயக்குநர் பத்மா பசவந்​தப்பா விடுத்​துள்ள அறிக்​கை​யில் கூறியுள்​ள​தாவது: அண்​மை​யில் ஊடகங்​களில் வெளி​யான செய்தி​கள் தவறானவை. கர்​நாட​கா​வில் 2004-ம் ஆண்​டில் இருந்து 18 முதல் 35 வயதுக்​குட்​பட்ட சுமார் 7000 பேருக்கு எச்​ஐவி தொற்று இருக்​கிறது. இதனை திரித்​து, கல்​லூரி மாணவர்​களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக செய்​தி​கள் பரப்​பப்​பட்​டுள்​ளன.

எங்​களிடம் இருக்​கும் புள்​ளி​ விவரங்​களில் மாணவர்​கள், இளம்​பெண்​கள், இல்லத்தரசிகள் என்​பது போன்ற வகைப்​பாடு எது​வும் இல்​லை. இந்த நோயை கட்​டுப்​படுத்​தும் நோக்​கில் கல்​லூரி​களில் எச்​ஐவி பரிசோதனை, எய்ட்ஸ் நோயாளி​களுக்​கான சிகிச்சை முகாம்​கள் நடத்த அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தேசிய எய்ட்ஸ் கட்​டுப்​பாட்டு அமைப்​பின் அறிக்​கை​யின்​படி, நாட்டில் எச்​ஐவி தொற்று அதி​க​மானோர் வாழும் மாநிலங்​களின் பட்​டியலில் கர்​நாடகா 3-வது இடத்​தில் உள்​ளது. கர்​நாட​கா​வில் சுமார் 2.60 லட்​சம் பேர் எச்​ஐவி பாதிப்​புக்கு ஆளாகி​யுள்​ளனர். இவ்வாறு பசவந்​தப்​பா கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT