உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்

 
இந்தியா

1947-ல் மோடி பிரதமராக இருந்திருந்தால் வரலாறே வேறு: யோகி ஆதித்யநாத் பேச்சு

இந்தியா பிளவுபட்டதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்​னோ​வில் நேற்று நடை​பெற்ற ‘பிரி​வினை கொடுமை நினைவு நாள்’ நிகழ்ச்​சி​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது:

அரசி​யல் அதி​காரத்​துக்கு முன்​னுரிமை அளித்​ததன் மூலம் காங்​கிரஸ் கட்சி நாட்​டுக்​குத் துரோகம் இழைத்​து​விட்​டது. சுதந்​திரத்​தின்​போது நமது நாடு பிளவுபட்​டதற்கு காரணம் காங்​கிரஸ் கட்​சி​தான்.

சுதந்​திரத்​தின் போது நரேந்​திர மோடி இந்​தி​யா​வின் பிரதம​ராக இருந்​திருந்​தால் வரலாறு வேறு மாதிரி​யாக இருந்​திருக்​கும். யாராலும் இந்​தி​யா​வுக்கு சிறிதள​வும் பாதிப்பை ஏற்​படுத்​தி​யிருக்க முடி​யாது. சர்​தார் வல்​ல​பாய் படேல் போன்ற ஒரு தலை​வர் ஆட்​சி​யில் இருந்​திருந்​தால் இந்​தி​யா​வைப் பிளவுபடுத்த அனு​ம​தித்​திருக்க மாட்​டார். காங்​கிரஸ் தலை​வர்​களின் செயலுக்​காக நாடு பெரும் விலை​யைக் கொடுக்க வேண்​டி​யிருந்​தது.

சுதந்​திரத்​தின்​போது வங்​கம், வங்​காள மக்​கள் அதி​கம் வசித்த பகு​தி​யாக இருந்​தது. இந்​துக்​கள் அதி​கம் வசித்த கிராமங்​கள் அனைத்​தும் கட்​டாய​மாக வங்​கதேசத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

அதி​காரத்​தைக் கைப்​பற்​று​வ​தில் அதீத ஆர்​வம் காட்​டிய காங்​கிரஸால் இந்த அவமானகர​மான செயல் செய்​யப்​பட்​டது; நாடு அந்​தக் கட்​சி​யின் மீது நம்​பிக்கை வைத்​திருந்​தது, ஆனால் அக்​கட்சி அந்த நம்​பிக்​கைக்​குத் துரோகம் இழைத்​தது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT