இந்தியா

எஸ்ஐஆர் குற்றச்சாட்டுகளுக்கு இடையே மே. வங்கத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ​போலி வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​காக வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதன் மூலம் முஸ்​லிம்​களின் வாக்​குரிமை பறிக்​கப்​படு​வ​தாக மேற்கு வங்​கம், பிஹார் மற்​றும் உத்​தரப் பிரதேசத்​தில் பரவலான குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன.

மேற்கு வங்​கத்​தில், சுமார் 91 லட்​சம் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. இவர்​களில் சுமார் 63% பேர் இந்​துக்​கள் (சு​மார் 57.47 லட்​சம்), 34% பேர் முஸ்​லிம்​கள் (சு​மார் 31.1 லட்​சம்). இந்த நீக்​கங்​கள் வழக்​க​மான தூய்​மைப்​படுத்​தும் பணி​யின் ஒரு பகுதி என்று தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் கூறி​னார்.

எஸ்​ஐஆர் பணி​யின்​போது முஸ்​லிம்​கள் அதி​கம் நீக்​கப்​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இதை நிராகரித்த தேர்​தல் ஆணை​யம் இறந்த அல்​லது இரட்​டைப் பதிவு​களை நீக்கி வாக்​காளர் பட்​டியலைச் செம்​மைப்​படுத்​தும் அரசி​யலமைப்பு நடவடிக்​கை​தான் எஸ்​ஐஆர் என்று கூறியது. ஊடுரு​வல்​காரர்​களை தடுப்​ப​தற்​கான வழி​தான் எஸ்​ஐஆர் என அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்​திய ஜனநாயகத் தேர்​தல்​களின் நேர்​மை​யைக் குலைக்​கும் நோக்​கில் நடத்​தப்​படும் விரி​வான வாக்​குத் திருட்டு திட்​டத்​தின் ஒரு பகு​தியே எஸ்​ஐஆர் என்று மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி நாடாளு​மன்​றத்​தில் குற்​றம் சாட்​டி​னார்.

இதற்​குப் பதிலளித்த அமித் ஷா, ‘‘கண்​டறிதல், நீக்​குதல் மற்​றும் நாடு கடத்​துதல்’’ என்ற கொள்​கை​யின் மூலம் பாஜக ஜனநாயகத்​தைப் பாது​காப்​ப​தாகக் கூறி​னார். இதில் நாடு கடத்​துதல் என்ற அம்​சம் முஸ்​லிம்​களிடையே அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் கடந்த 23-ம் தேதி 16 மாவட்​டங்​களில் உள்ள 152 தொகு​தி​களில் முதல்​கட்ட வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில் 54 தொகு​தி​களில் முஸ்​லிம்​களின் மக்​கள் தொகை கணிச​மாக உள்​ளது. இங்கு கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தலை விட பல தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு கடுமை​யாக அதி​கரித்​துள்​ளது. எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யின்போது அதிக நீக்​கங்​கள் செய்​யப்​பட்ட முர்​ஷி​தா​பாத் மற்​றும் மால்டா மாவட்​டங்​களில் வாக்​குப்​ப​திவு 90 சதவீதத்தை தாண்​டியது. வாக்​காளர் பட்​டியல் திருத்​தக் குற்​றச்​சாட்​டு​களுக்கு மத்​தி​யில், மேற்​கு​வங்​கத்​தில்​ முஸ்​லிம்​ வாக்​காளர்​கள்​ அதி​கள​வில்​ வாக்​களித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT