சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் கார் கருப்பு நிற கவர்களால் மூடப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட காட்சி சமூகவலை தளங்களில் வைரலாகி உள்ளது.

 
இந்தியா

டெல்லியில் சீன அதிபருக்கு உச்ச கட்ட பாதுகாப்பு: 10 நாட்களுக்கு முன்பே டெல்லி வந்தடைந்த ஹாங்கி என்701 ரக கார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க சீன அதிபர் ஜி ஜின்​பிங் நேற்று டெல்லி வந்​தடைந்​தார். வெளி​நாட்டு பயணங்​களுக்கு அவர், போயிங் 747-8 ரக விமானத்தை பயன்​படுத்தி வரு​கிறார். சீன அதிபரின் பாது​காப்​புக்​காக இந்த விமானத்​தில் ஏவு​கணை​கள், அதிநவீன கருவி​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன.

அதிபர் ஜி ஜின்​பிங், ஹாங்கி என்​701 என்ற சிறப்பு காரை பயன்​படுத்தி வரு​கிறார். சீனா​வில் தயாரிக்​கப்​பட்ட இந்​தக் கார் 18 அடி நீளம், 6.5 அடி அகலம் கொண்​ட​தாகும். குண்டு துளைக்​காத கண்​ணாடி, பஞ்​சர் ஆகாத டயர்​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன.

ஏவு​கணை, பீரங்​கி, துப்​பாக்​கிச்​சூடு தாக்​குதலை எதிர்​கொள்​ளும் வகை​யில் கார் வலு​வாக வடிவ​மைக்​கப்​பட்டு உள்​ளது. சுமார் 10 நாட்​களுக்கு முன்பே சரக்கு விமானம் மூலம் ஹாங்கி என்​701 வகை​யைச் சேர்ந்த இரு கார்​கள் டெல்​லிக்கு கொண்டு வரப்​பட்​டன. அதோடு அதிநவீன தகவல் தொழில்​நுட்ப சாதனங்​களும் விமானத்​தில் வந்து சேர்ந்​தன.

தாஜ் பேலஸ் நட்​சத்​திர ஓட்​டலில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் தங்கி உள்​ளார். அந்த ஓட்​டல் முழு​வதும் அங்​குலம், அங்​குல​மாக தீவிர சோதனை நடத்​தப்​பட்டு உள்​ளது. ஓட்​டலின் மேலே விமானங்​கள், ட்ரோன்​கள் பறக்க தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது.

சீன அதிபர் ஜி ஜின்​பிங் சுமார் 24 மணி நேரம் டெல்​லி​யில் தங்​கி​யிருக்க உள்​ளார். அது​வரை அவருக்கு உச்​சக்​கட்ட பாது​காப்பு வழங்​கப்​படும் என்று டெல்லி போலீஸ் மூத்த அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

பிரிக்ஸ் மாநாட்டை ஒட்டி தலைநகர் டெல்​லி​யில் 15,000-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸாரும் மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 20,000-க்​கும் மேற்​பட்ட வீரர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்டு உள்​ளனர். மாநாடு நடை​பெறும் பாரத் மண்​டபத்​தில் ட்ரோன் எதிர்ப்பு கவச வாக​னங்​கள் நிலை நிறுத்​தப்​பட்டு உள்​ளன.

SCROLL FOR NEXT