இந்தியா

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப் பதிவுக்கு பலத்த பாதுகாப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்​ரல் 29-ம் தேதி தேர்​தல் நடை​பெறவுள்ள 142 தொகு​தி​களின் தயார்​நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொல்​கத்​தா​விற்கு உட்​பட்ட மூன்று தேர்​தல் மாவட்​டங்​களின் மூத்த காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் மத்​தி​யப் படைத் தளப​தி​கள் பங்​கேற்ற உயர்​மட்ட ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து தேர்​தல் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தேர்​தல் பாது​காப்​புத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, 160 மோட்​டார் சைக்​கிள்​களில் தலா இரண்டு மத்​திய ஆயுதக் காவல் படை வீரர்​கள் தொகுதி முழு​வதும் ரோந்​துப் பணி​யில் ஈடு​படு​வர். இதன் மூலம் ஏதேனும் பிரச்​சினை ஏற்​பட்​டால் உடனடி​யாக சம்பவ இடத்​திற்​குச் சென்று உடனடி​யாக நடவடிக்கை எடுக்க முடி​யும்.

பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளைக் கண்​டறிதல், சிவில் மற்​றும் காவல்​துறை நிர்​வாகத்​திற்கு இடையி​லான தகவல் தொடர்பை வலுப்​படுத்​துதல் மற்​றும் அனைத்​துப் பகு​தி​களி​லும் பாது​காப்​புப் படை​யினரின் நடமாட்​டத்தை உறுதி செய்​தல் ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தப்​பட்​டுள்​ளது.இவ்​வாறு அவர் கூறி​னார்.

தெற்கு 24 பர்​கனாஸ் மாவட்​டத்​தின் காக்ட்​வீப் பகு​திக்​குச் சென்ற மாநிலத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி மனோஜ் குமார் அகர்​வால், அரசி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், ‘‘அமை​தி​யான முறை​யில் வாக்​குப்​ப​திவு நடை​பெறு​வதை அனை​வரும் உறுதி செய்ய வேண்​டும். கள்ள ஓட்டு போடு​வது அல்​லது வாக்​குச்​சாவடியைக் கைப்​பற்​று​வது போன்ற செயல்​கள் ஒரு​போதும் அனு​ம​திக்​கப்​ப​டாது.

அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​படும். வாக்​குச்​சாவடிகளில் மத்​தி​யப் படை​யினர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​வர். வாக்​குச்​சாவடியைச் சுற்றி 100 மீட்​டர் தொலை​விற்​குள் தேவையற்ற நபர்​கள் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். வாக்​காளர்​கள் அச்​சமின்றி வந்து தங்​கள் ஜனநாயகக்​ கடமை​யை ஆற்​ற வேண்​டும்​’’ என்​றார்​.

SCROLL FOR NEXT