இந்தியா

கனமழையால் டெல்லி விமான நிலையத்தில் தண்ணீர் தேக்கம்: பயணிகளுக்கு கடும் சிரமம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலையத்தில் பெய்த கனமழை​யால் நுழை​வா​யில்​களில் பலத்த தண்​ணீர் தேங்​கியது.

வெள்​ளம் வடி​யாத​தால் அரை மணி நேர​மாக காத்​திருப்​ப​தாக​வும், இது​போன்ற காட்​சி​யைத் தான் பார்த்​ததே இல்லை என்​றும் மன்சி என்ற பயணி தெரி​வித்​துள்​ளார். பயணி​கள் தங்​கள் பேண்ட்டை மடித்​துக்​கொண்டு லக்​கேஜ் வண்​டிகளு​டன் நீரில் நடந்து சென்றனர். டெல்​லி​யின் பிற இடங்​களி​லும் இதே​போல வெள்​ளம் தேங்​கியது.

இந்​திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளி​யிட்ட 3 மணி நேர மழைப்​பொழிவு தரவுப்​படி, பாலம் பகு​தி​யில் 3.4 மி.மீ மழை​யும், நஜப்​கர் பகு​தி​யில் 0.5 மி.மீ மழை​யும் பதி​வானது. மற்ற பெரும்​பாலான கண்​காணிப்பு நிலை​யங்​களில் மழை பதி​வாக​வில்​லை.

பிற்​பகல் 2.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை​யிலும், மீண்​டும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை​யிலும் பெரும்​பாலான இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், சில இடங்​களில் கனமழை​யும் பெய்​யக்​கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்​னறி​விப்பு வெளி​யிட்​டது.

அடுத்த 3 மணி நேரத்​தில் பெரும்​பாலான இடங்​களில் மித​மான மழை​யும், சில இடங்​களில் 50-100 மி.மீ அளவி​லான கனமழை​யும் பெய்​யும் என்​றும், அத்​துடன் இடி, மின்​னல் மற்​றும் மணிக்கு 40-50 கி.மீ (அதி​கபட்​ச​மாக 60 கி.மீ) வேகத்​தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT