புதுடெல்லி: காவிரியில் கடந்த ஜூலை தொடங்கி அக்.12-ம் தேதி வரை கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் 11 டி.எம்.சி. பற்றாக்குறை இருப்பதாகவும், அந்த நீரை உடனடியாகத் திறந்துவிட உரிய உத்தரவு பிறப்பிக்க கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.
அதுபோல, திமுகவின் விவசாயப் பிரிவு சார்பில் ஏ.கே.எஸ்.விஜயன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு புதிதாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.