புதுடெல்லி: பாஜகவுக்கு உதவுவதற்காகவே விண்ணப்பப் படிவம் 6-ஐ தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாற்றியுள்ளார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி், சிஜேபி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: எஸ்ஐஆர் பணியில் படிவம் 6-ஐ சட்டவிரோதமாக, ஒருதலைபட்சமாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாற்றியுள்ளார்.
படிவம் 6-ஐ அவர் மாற்றியது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகி உள்ளது. பாஜகவுக்கு உதவவே தனது பதவியை முறைகேடாக ஞானேஷ் குமார் பயன்படுத்தியுள்ளார். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு ஞானேஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.