இந்தியா

ஸ்மித் மச்சார் டாட்டூ வரைந்து கொண்டாடும் குஜராத் பெண்கள்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: நவ​ராத்​திரி விழாவை முன்​னிட்டு பைலட் ஸ்மித் மச்​சா​ரின் உரு​வத்தை டாட்டூ​வாக வரைந்து குஜராத் இளைஞர்கள், பெண்​கள் கொண்​டாடத் தயா​ராகி​யுள்​ளனர்.

அண்​மை​யில் துபாயி​லிருந்து இஸ்​ரேலின் டெல் அவிவ் நோக்கி புறப்​பட்ட ஃபிளைது​பாய் விமானத்தை மோதச் செய்ய துணை பைலட் முயன்​றார். ஆனால் இந்​தி​யரும், பைலட்டுமான ஸ்மித் மச்​சார் இந்த முயற்​சியை முறியடித்​தார். தலை உள்​ளிட்ட இடங்களில் காயம் அடைந்​த​போதும், விமான மோதல் முயற்சியைத் தடுத்து உலகம் முழு​வதும் புகழ்​பெற்​று​விட்​டார்.

இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் நவராத்​திரி திரு​விழா வரும் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கோலாகல​மாக நடை​பெறவுள்​ளது. குஜ​ராத்​தி​லுள்ள இளைஞர்​கள், ஹீரோ பைலட் ஸ்மித் மச்​சா​ரின் உரு​வத்தை தங்​களது உடல்​களில் வரைந்து கொண்​டாடத் தொடங்​கி​யுள்​ளனர்.

தங்​களது கைகள், கால்​கள், உடலின் பிற பகு​தி​களில் ஸ்மித் மச்சாரின் டாட்​டூக்​களை இளைஞர்​கள் வரைந்து அவரைப் போற்றி வரு​கின்​றனர். அதே​போல் ஸ்மித் மச்​சா​ரின் உரு​வத்தை இளம்​பெண்​கள் தங்​களது முதுகுப் பகு​தி​யில் வரைந்து உலா வரு​கின்​றனர். மேலும் 2030-ல் நடை​பெறவுள்ள காமன்​வெல்த் விளையாட்​டுப் போட்டி தொடர்​பாக​வும் தங்​களது உடல்​களில் பெண்​கள் டாட்​டூக்​களாக வரைந்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT