இந்தியா

ஒற்றுமை சிலை வளாகத்தில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் திட்டம்

மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: குஜ​ராத்​தில் உள்ள ஒற்​றுமை​யின் சிலை வளாகத்​தில் ஆண்​டு​ தோறும் நடை​பெறும் அறி​வுப் பகிர்வு மற்​றும் வழிகாட்டுதல் திட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக, மூத்த மற்​றும் இளம் சிவில் சர்​வீஸ் அதி​காரி​களைப் பரிந்​துரைக்​கு​மாறு மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களுக்கு மத்​திய அரசு கடிதம் எழு​தி​யுள்​ளது.

கடந்த 2025 டிசம்​பர் மாதம் டெல்​லி​யில் உள்ள நிதி ஆயோக்​கில் தலை​மைச் செய​லா​ளர்​களின் 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு விழா​வில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, ‘முன்​னாள் மற்​றும் மூத்த ஐஏஎஸ் உள்​ளிட்ட சிவில் சர்​வீஸ் அதி​காரி​கள், ஒவ்​வொரு ஆண்​டும் அக்​டோபர் 31ம் தேதி ஒற்றுமை​யின் சிலைக்​குச் சென்​று, இளம் அதி​காரி​களு​டன் ஒரு நாளைச் செல​விட்டு அவர்​களை ஊக்​கப்​படுத்த வேண்​டும்’ என்று அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

பிரதமரின் இந்த ஆலோ​சனையைத் தொடர்ந்தே மத்​திய பணியாளர் அமைச்​சகம் தற்​போது இந்த நடவடிக்​கையை மேற்கொண்டுள்​ளது. சர்​தார் வல்​ல​ப பாய் படேலின் பிறந்​த​நாளான அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒற்​றுமை தின​மாக நாடு முழு​வதும் கொண்​டாடப்​படு​கிறது.

தேசிய ஒற்​றுமை​யின் மாண்​பு​களைப் பிர​திபலிக்​கும் வகை​யில், இந்​தத் திட்​டத்தை அதே நாளில் நடத்​து​வது என முடிவெடுக்கப்பட்டுள்​ளது. இதன் மூலம், நிர்​வாகம், பொது நிர்வாகம், கொள்கை உரு​வாக்​கம் எனப் பல்​வேறு துறை​களில் பரந்த அனுபவ​மும் நிபுணத்​து​வ​மும் பெற்ற மூத்த அதி​காரி​களும், இளம் அதி​காரி​களும் பரஸ்​பரம் கலந்​துரை​யாட முறை​யான வழிகாட்​டு​தல் தளம் உரு​வாக்​கப்​படும்.

நிர்​வாகத் திறனை மேம்​படுத்​தும் நோக்​கில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த வரு​டாந்திர திட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக, தகு​தி​யான மூத்த மற்​றும் இளம் ஐஏஎஸ் அதி​காரி​களின் குழு​வைப் பரிந்​துரைக்​கு​மாறு அனைத்து மாநில அரசுகளுக்​கும் மத்​திய பணி​யாளர் அமைச்​சகம் அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கேட்​டுக்​ கொள்ளப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT