இந்தியா

இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு: மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எல்​பிஜி சிலிண்​டர்​கள் உற்​பத்தி 30 சதவீதம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, ​மக்​கள் பீதி அடைய வேண்​டாம் என மத்​திய அரசு அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது.

மத்​திய கிழக்​கில் தீவிரமடைந்​துள்ள ஈரான்​-அமெரிக்​கா, இஸ்​ரேல் மோதல் காரண​மாக இந்​தி​யா​வில் சமையல் எரி​வாயு சிலிண்​டர் (எல்​பிஜி) விநி​யோகம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. ஹார்​முஸ் ஜலசந்தி கிட்​டத்​தட்ட மூடப்​பட்​டுள்​ள​தால், கத்​தார் மற்​றும் சவுதி அரேபியா போன்ற நாடு​களில் இருந்து எல்​பிஜி வருவது தடைபட்டுள்​ளது.

          

இதனால், கடந்த சில நாட்​களாக வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ​மக்​கள், வீட்டு உபயோக சிலிண்​டருக்​கான புக்​கிங்கை அதிக அளவில் செய்​யத் தொடங்​கினர். போன் மூலம் அதிக அளவில் புக்​கிங் செய்​யப்​படு​வ​தால் அந்த சிஸ்​டம் செயலிழந்​தது. இதையடுத்து எல்​பிஜி ஏஜென்சி முன்பு அதிக அளவில் பொது​மக்​கள் குவி​யத் தொடங்​கினர்.

இந்​நிலை​யில், எல்​பிஜி சிலிண்​டர் உற்​பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்​ள​தாக​வும், மக்​கள் பீதி அடைய வேண்​டாம் என்​றும் மத்​திய அரசு நேற்று அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது. இதுகுறித்து மத்​திய பெட்​ரோலியத் ​துறை இணை செயலர் சுஜாதா சர்மா கூறிய​தாவது: வழக்​க​மாக தினந்​தோறும் நாடு முழு​வதும் 55.7 லட்​சம் பேர் எல்​பிஜி சிலிண்​டர் புக்​கிங் செய்​வார்கள். சிலிண்​டர் கிடைக்​காது என்று கருதி, கடந்த சில நாட்​களாக 75.7 லட்​சம் பேர் சிலிண்​டருக்​காக புக்​கிங் செய்து வரு​கின்​றனர்.

இதையடுத்து, இந்​தப் பிரச்​சினையை சரி செய்​யும் முயற்​சி​யில் மத்​திய அரசு தீவிர​மாக இறங்​கி​யுள்​ளது. இதற்​காக எல்பிஜி சிலிண்​டர் உற்​பத்​தியை 30 சதவீதம் அதி​கரித்​துள்​ளோம். எனவே, சிலிண்​டர் கிடைக்​காது என பொது​மக்​கள் அச்சப்பட வேண்டாம்.

புக்​கிங் செய்​யும் அனை​வருக்​கும் காஸ் சிலிண்​டர் நிச்​ச​யம் கிடைக்​கும். மக்​கள் பீதி அடை​யாமல் இருக்​கவேண்​டும். ​மக்​களுக்கு 100 சதவீத காஸ் சிலிண்​டர் விநி​யோகம் நடை​பெற்று வரு​கிறது. எனவே, இதுதொடர்​பாக யாரும் பொய்​யான தகவல்​களை பரப்பி பொது​மக்​களை பீதி அடையச் செய்ய வேண்​டாம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT