திருமலை: ஆந்திர ஆளுநராக அப்துல் நசீர் பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி திருப்பதி வந்து செல்கிறார். அப்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு சென்று பக்தியுடன் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்று காலையில் தனது குடும்பத்தாருடன் கோயிலுக்கு வந்தார். கோயில் வாசலில் அவருக்கு பூரண கும்பமரியாதை அளித்து அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து ஏழுமலையானை ஆளுநர் அப்துல் நசீர் தரிசனம் செய்தார்.